பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவி நாயகன் 168 நாயகளுகிய கம்பர் பெருமான் கவிநாயகனகிய அநுமனேச் "செவிக்குத் தேனென இராகவன் புகழினைத் திருத்தும் கவிக்கு நாயகன்’ எனச் சுவையாகச் சுட்டியுரைத்தனன். 'கவிக்கு நாயகன் கவிநாயகன்’ என்ற அருமையான இரண்டு சொற்ருெடர்களும் கம்பனையும் மாருதியையும் குறிப்பதை அறிந்து மகிழ்கின்ருேம். இவை இரண்டும் படிப்போரின் சிந்தையில் தேன்பிலிற்றும் சிறப்பான சொற்ருெடர்களாக நின்று சிந்தைக்கும் செவிக்கும் இன்னமுது ஊட்டி நிற்பதையும் உணர்கின்ருேம்.