பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. கம்பன் காட்டும் மேழிச் செல்வம்: பன்னெடுங்காலமாகவே தும் நாடு உழவுத் தொழிலில் தலைசிறந்து விளங்கிய நாடாகும். இதுபற்றியே தமிழ் மூதாட்டியராகிய அவ்வையார் மேழிச் செல்லம் G57 ಫಾರ್ಕ್ಟಿ படாது' என்று கூறிப் போந்தார். புறநானூற்றுப் புலவரும் நம் நாட்டு வளத்தை, ஒருபிடி படியும் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே' என்று புலப்படுத்தியுள்ளார். ஒரு பெண் யானே படுத் துறங்கும் சிறிய இடத்தில் விளையும் விளைபொருள்கள் ஏழு ஆண் யானைகட்குப் போதுமான அளவு விளைந்தன என்ப தாக நிலவளத்தைக் குறிப்பிட்டுள்ளார். இங்ஙனம் பண்டு புலவர்களால் புகழ்ந்து பாடப்பெற்ற நாட்டில் இன்று எங்கனம் உணவுபற்ருக் குறை தலைவிரித்தாடுகின்றது? உணவுப் பங்கீட்டு முறை, வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்களே இறக்குமதி செய்தல், அந்நாடுகளினின்றும் இலவச உணவுப் பொருள்களைப் பெறுதல், உணவுப்

  • திரு A, s. s. S. சங்கரபாண்டிய நாடிார் மூத்து விழா மலரில் (1958) வெளிவந்தது மூதது விழி

1. தொன்றைவேந்தன் . 17