பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் காட்டும் மேழிச் செல்வம் ! 05 பெருக்கத் திட்டம் இவை அன்ருடப் பிரச்சினைகளாகி விட்டன. தாம் இதுகாறும் மேற்கொண்ட தவருன கொள்கைகளைத் திருத்திக் கொள்ளாது இவைபற்றி அரசினர் முழக்கம் செய்து வருகின்றனர். இத்தகைய அவல நிலைக்குக் காரணம் என்ன? மக்கள் தோகைப் பெருக்கம், மேழிச் செல்வத்தில் தக்க கவனம் செலுத்தாமை, அரசினர் கொள்கைகளில் உள்ள குறைபாடுகள் இன்னே ரன்னவையே காரணங்களாகும். வன மஹோத்லவம்’ "ஏர்முனை விழா போன்ற விழாக்களைக் கொண்டாடுவதால் யாதொரு பயனும் விளையப் போவதில்லை. வாணிகத்திற்குப் பொருத்தமான விளம்பரத் திட்டங்களை உணவுப் பெருக் கத்திற்காக அரசினர் மேற்கொள்வது வருத்தத்தை விளே விக்கின்றது. இந்நிலையில் கம்பன் கூறும் மேழிச்செல்வத் தைப் பற்றி ஆராய்தல் மிகவும் பொருத்தமாகும். கம்பன் தமிழக வளத்தைக் கண்டு கோசலநாட்டு வளத்தைப் பேசுகின்ருன். இந்த நாட்டில் அரிய பொருள்கள் மிகுதியாக விளைதலால் அவற்றில் வேண்டியன போக எஞ்சியவற்றை வேற்று நாட்டிற்கு மரக்கலங்கள் ஏற்றிச்சென்று அங்கு இறக்கிய பிறகு அந்த மரக்கலங்கள் அப்பாரத்தைச் சுமத்தலாகிய வருத்தத்தைச் நெய்தல் நிலத்தில் ஆற்றிக் கொள்கின்றனவாம். "முறையறிந்து அவாவை நீக்கி முனிவழி முனிந்து வெஃகும் இறையறிந்து உயிர்க்கு நல்கும் இசைகெழு வேந்தன் காக்கப் பொறைதவிர்ந்து உயிர்க்கும் தெய்வப் பூதலந் தன்னின் பொன்னின் நிறைபரம் சொரிந்து வங்க நெடுமுதுகு ஆற்றும் நெய்த்ல்" 2. புறம்-48 8, பலகrண். தாட்டுப்-19,