பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}. புடைய மருதூரைச் சேர்ந்த இப்பெருமகளுர் நெல்லை இந்து கல்லூரி, பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி, சென்னை சட்டக் கல்லூரி ஆகியவற்றில் நற் கல்வி பயின்று சென்னையிலும் நெல்லையிலும் வழக்குரைஞராகப் பணி யாற்றிப் பெரும் புகழ் பெற்றவர். இப்போது ஐம்பத்து நான்கு அகவை நிறைந்த இந்த இளைஞர் 1971-இல் பப்ளிக் பிராசிகுபூட்டராக நியமனம் பெற்று மூன்ருண்டுகள் சிறப்புடன் பணியாற்றியவர். சட்ட நுட்பங்களையெல்லாம் ஆழ்ந்து காணும் இவரது திறனேக் கண்டு தமிழக அரசு இவருக்கு நீதிபதிப் பதவியை அளித்துச் சிறப்பித்தது. சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் பணியாற்றிவரும் சிறப்பை இவர்தம் தீர்ப்புகளைக்காணும் அன்பர்கள் அவற் றின் திட்பத்தையும் துட்பத்தையும் உணர்வார்கள். இத்தனைக்கும் மேலாக இவர்தம் சீலமும் எளிமையும் இன்முகத்துடன் அன்பர்களே ஏற்கும் பண்பும் எவரையும் கவரும் பான்மையவை. இத்தகைய பேரன்பர் இந்நூலுக்கு மனமுவந்து அணிந்துரை அருளியது இந்நூல் பெற்ற பேறு. இவருக்கு என் இதயம் கனிந்த நன்றியைப் புலப் படுத்திக் கொள்ளுகின்றேன். அன்பாலும் பண்பாலும் ஆழ்புலமையாலும் இத்தனைக் கும் மேலாகத் தம் அடக்கத்தாலும் சீலத்தாலும் என் உள்ளத்தைக் கவர்ந்தவர் பேராசிரியர் டாக்டர் வி. வரதாசாரியார் பல்லாண்டுகள் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் வடமொழித் துணைப்பேராசிரியர் (Reader) பதவியிலிருந்து ஒய்வு பெற்றுத் தற்சமயம் புதுச் சேரி ஃபிரெஞ்சு ஆய்வுக்கழகத்தில் ஆய்வு நெறியாளராகப் பணியாற்றி வருபவர். நான் திருப்பதியிலிருந்த காலத்தில் என் பிஎச்.டி. ஆய்வுக்கு வழிகாட்டியாக இருந்தபோதும், அதற்குப் பின்னரும் இவருடன் நெருங்கிப் பழகும் பேறு பெற்றேன். வடமொழி இலக்கியத்தின் நயத்தையும் சிறப் பையும் எனக்கு எளிமையாக எடுத்துக் காட்டி அதன்பால் பற்றினை உண்டாக்கி வளர்த்தவர். மாலவனையும் மாறனே