பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 கம்பனில் மக்கள் குரல் (முறை.நீதி; முனிவு-சினம்; வெஃகும்-விரும்பும்; இசை, புகழ்; பொறை.பாரம்: உயிர்க்கும். இளைப்பாறும்; பூதலம்.பூமி, பொன்னின்நிறை பரம்.அரிய பொருள்கள் நிறைந்த பாரம்) என்பது கவிஞனின் வாக்கு. செங்கோல் மன்னன் அரசு செய்வதால் பாவம் நிரம் புதவிளுகிய சுமை நீங்கி இளைப்பாறி நிற்கும் பூமி மரக்கலத் திற்கு உவமையாக வந்துள்ளமை அறிந்து மகிழத்தக்கது, இத்தகைய பொருள்களே வண்டுகள் பல மலர்களிடத்துச் சென்று மதுவைக் கொணர்ந்து ஒரிடத்திற் சேர்ப்பது போல மன்னர்கள் எல்லாவிடத்தும், சென்று அவ்வவ் விடத்துப் பொருள்களை அந்நாட்டில் கொண்டுவந்து சேர்ப்பார். இதனைக் கம்பநாடன், "கதிர்படு வயலின் உள்ள கடிகமழ் வயலின் உள்ள முதிர்பல மரத்தின் உள்ள முதிரைகள் புறவின் உள்ள பதிபடு கொடியின் உள்ள படிவளர் குழியின் உள்ள மதுவள மலரிற் கொள்ளும் வண்டென மன்னர் கொள்வார்' (கதிர்-தானியக்கதிர்; கடி-மணம், பலமரம்.பலா மரம்; புறவு-கொல்லை; முதிரை-பருப்பு வகை; பதி.பூமி, குழியின் உள்ளவை-மஞ்சள், இஞ்சி போன்றவை) என்று விளக்குகின்றன். இங்ங்ணம் மக்கள் வாழ்க்கைக்கு உயிர் நாடியாகவுள்ள மேழிச்செல்வத்தைப் போற்றும் வகையில் “ஏரெழுபது” 4. டிெ டிெ-21,