பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் காட்டும் மேழிச் செல்வம் 107 என்ற ஒரு சிறிய நூலே இயற்றியுள்ளான் கவிச்சக்கரவர்த் யாகிய கம்பநாடன். இந்த நூல் கம்பனுடையதா? அல்லது பிற்காலத்துப் புலவர் ஒருவர் இயற்றிக் கம்பன் இயற்றினதாக அவன் பெயரில் உலவ விட்டாரா?” என்ற ஆராய்ச்சியில் நாம் இப்பொழுது இறங்கவேண்டாம்: அவன் மேழிச் செல்வத்தை எங்ஙனம் பாராட்டியுள்ளான் என்பதை மட்டிலும் ஈண்டுக் காண்டோம், உழவர்களின் சிறப்பு : அழுங்குழவியை எடுத்தனக்கும் தாய் போன்று தம்மிடம் எழுங்கருணையால் அனைத்துயிர் களையும் காக்கும் பண்புடையவர்கள் உழவர்கள். இவ்வுல கத்தைப் படைத்த நான்முகன் இவ்வுழவர்களைத்தான் క్ష : భీ முதற்கருவாகப் படைத்தான். வேதியரின் உயர்குலமும் விறல்வேந்தர் பெருங்குலமும், நிதிவளம் மிக்க வணிகர் குலமும் தாயனைய உழவர் குலத்திற்கு ஈடாகாது என்ப தைப் பன்னியுரைக்க வேண்டியதில்லை என்பது கவிஞனின் கருத்தாகும். உழவர்கள் ஏர்விழாக் கொண்டா லன்றி முடிசான்ற மன்னர்களும் போர்விழாவை மேற்கொள்ள முடியாது. காரணம், அவர்களது செங்கோலை நடத்தும் கோலும் உழவர்களின் ஏர் அடிக்கும் சிறு கோலன்ருே? இதுகருதியே வள்ளுவப் பெருந்தகையும் உழவர் உலகத் திற்கு ஆணி’ என்று கூறிப் போந்தார். மேலும் வள்ளுவர் கருத்தினைத் தழுவியே கம்பநாடனும், "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாரும் தொழுதுண்டு பின்செல்வார் என்றேஇத் தொல்லுலகில் எழுதுண்ட மறையன்ருே?" 5, ஏரெழுபது-பாயிரம்-9, 6. குறள்-1632 7, ஏரெழுபது, 9;குறள் 1088