பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் காட்டும் மேழிச் செல்வம் 1% 'வாழிகான் மறையோர்கள் வளர்க்கின்ற வேள்விகளும் ஆழியால் உலகு அளிக்கும் அடல்வேந்தர் பெருந்திருவும் ஊழிபெறி னும்பெயரா உரையுடைய பெருக்காளர் மேழியால் விளைவதல்லால் வேருென்ருல் விளையாவே' (பெருக்காளர்-வேளாளர், உழவார் என்று பாராட்டுகின்ருன்; உழவர்களின் ஏர் நடப்பதளுல் தான் உலகில் எல்லாச் செயல்களும் நடைபெறும் என்றும், ஆளுல் பசிமட்டிலும்' நடக்காது’, என்றும் சமத்காரமாகப் பேககின்ருன். 'கார்நடக்கும்: படிகடக்கும்; காராளர் தம்முடைய ஏர்நடக்கும்; எனில் புகழ்சால் இயல்இசைகா டகம் கடக்கும்; சீர்கடக்கும்; திறம் கடக்கும் திருவறத்தின் செயல்கடக்கும்: பார்கடக்கும்; படைநடக்கும்; பசிநடக்க மாட்டாதே' என்பது கவிஞனின் வாக்கு. உழவு கருவிகளின் சிறப்பு: உழவுக்கருவிகளைச்சிறப்பிக்கும் கவிஞன் முதன் முதலாக ஏர்விழாவினைக்குறிப்பிடுகின்றன். உழவர்கள் ஏர்விழாவினை மேற்கொள்ளாவிடில் நான்கு விதபடைகளையுமுடைய பேரரசர்கள் போர்விழாவினை மேற்கொள்ள முடியாது. இதனைக் கவிஞன். 11. ஏரெழுபது-4 12. டிெ.18