பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iii) கம்பனில் மக்கள் குரல் "ஏர்விழாக் கொளின் அன்றி எறுழ்களித்தேர் மாப்படையால் போர்விழாக் கொளமாட்டார் போர்வேந்தர் ஆளுரே' என்று புலப்படுத்துகின்ருன். வட எல்லேயில் பகைவர்கள் "போர் முஸ்தீப்பு செய்து வரும் நிலையில் போர்முனையை மேற்கொண்டிருக்கும் நம் குடியரசு முதலில் ஏர்முனையில் கவனம் செலுத்தி உணவுப் பிரச்சினைக்குத் தீர்வு கான வேண்டும். இதனே நன்கு உணர்ந்த கவிஞன், "குடையாளும் முடிவேந்தர் கொலையான தேர்புரவி படையாளும் இவைநான்கும் படைத்துடையர் ஆல்ைஎன்? மடைவாளை வருபொன்னி வளதாடர் தங்கள்கலப் படைவாளைக் கொண்டன்றி பகையறுக்க மாட்டாரே' என்று பேசுகின்ருன். உலகியலை உணர்த்தும் கவிஞன் கூறும் உண்மையை உள்ளுந்தோறும் உவகை பொங்கு கின்றதன்ருே? இதனைத் தொடர்ந்து ஊற்ருணி, நுகத்தடி, நுகத்துளே, நுகத்தானி, பூட்டாங் கயிறு, கொழு, கொழுவாணி, தாற்றுக்கோல், உழுவெருது. அதன் சுவற்கறை முதலிய வற்றின் சிறப்புகள் பேசப்பெறுகின்றன. நீற்ருேனும் மலரோனும் நெடியோனும் ஆகிய மூவரால் உலகம் நிலை பெறுவதற்கு உழவர்கள் உழுங்கலப்பையின் ஊற்ருணியே முதற்காரணம் என்று அதனைச் சிறப்பித்துப் பேசுவான் கவிஞன். வித்தினை ஏற்ற உழவர்கள் வெறுங்கையுடன் 1s. டிெ-2 24. டிெ-ே