பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் காட்டும் மேழிச் செல்வம் 1 ili போகாமல் அவர்களைக் கரையேற்றும் உழுநுகத்தின் காரண மாகவே செங்கதிரோன் ஒளிநெடுந்தேர் பூண்ட நுகம் இந்த இருள் தருமா உலகின் செறியிருள் நீக்கப் பெறு வதாகச் செப்புகின்ருன். நுகத்தாணியைச் சிறப்பிக்கும் முகத் தான். 'காரா னிக் காவேரி வளநாடிார் உழுநுகத்தின் சீரானிக் கொப்பதொரு சிறந்தாணி செப்பீரே' என்று வினவுகின்ருன். எருதுகளிரண்டையும் செழுநுகத் தோடு பூட்டும் பூட்டாங்கயிறே "புவிமகள் மங்கலக் கயிருகும்” என்பது கவிஞனின் திடமான நம்பிக்கை. "கோதைவேல் மன்னர்தம் குடைவளமும் கொழுவளமே” என்று கொழு சிறப்பிக்கப்பெறுகின்றது. இந்த உலகின் நிலை வலியுடையதாயிருப்பதற்குப் பகைவர்களேத் தடுத்து நிற்கும் பனிவரை போன்ற எட்டு குலபர் வதங்கள் காரண மல்ல; திரைகொழிக்கும் ஏழுகடல்களும் அல்ல என்று தெரிவித்து. "எடுத்தபுகழ்ப் பெருக்காளர் எழுநுகத்தோ டிணைப்பகரு தொடுத்ததொடை நெகிழாதேல் உலகுதொடை நெகிழாதே' என்று தொடைச்சிறப்பினைப் பாராட்டுகின்றன். திங்கள் மும் மாரி பொழியினும், நிலமடந்தையின் கருணையால் ஊற்றுநீர் பெருகினலும், 15, ആു.-8 16. டிெ-16