பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i lò கம்பனில் மக்கள் குரல் வழுவாத காவேரி வளங்ாடர் உழுகலப்பைக் கொழுவாணி கொண்டன்றிக் குவலயஞ்சீர் நிரம்யாதே' ' என்று கொழுவாணியின் இறப்பினைப் போற்றுகின்றன். நஞ்செய் வயலினுள் நெற்பயிரின் நாற்று முடி திருந்தினல் தான் பார்வேந்தரின் திருமுடி திருந்தும் என்பது கவிஞனின் கொள்கை. உண்மையும் அதுதானே? . பொங்கோதைக் கடற்ருனப் போர்வேந்தர் நடத்துபெருஞ் செங்கோலை நடத்துங்கோல் ஏரடிக்கும் சிறுகோலே' ' என்று தாற்றுக்கோலின் சிறப்பினேக் கூறும் முகத்தான் இதனை வலியுறுத்துகின்றன். வான மழை பொழிந்தாலும் நிலம் வளம்பெறுவதும், ஞான மறையவர் வேள்வி நலம் பெறுவதும், சேனையுடன் .ெ ச ரு க் க ள த் தி ல் சென்று பொரும் மன்னவரின் யானை வலிபெறுவதும் உழவர் களுடைய எருதுகளின் வலியால்தான் என்று கூறுகின்றன். எருதுகளின் கழுத்தில் நுகத்தில்ை ஏற்பட்ட கறையே 06rafಹ அமுதுாட்டி வானவரையும் வாழ்விக்கும் என்பது கவிஞனின் கொள்கை. இதனைக் கவிஞன், "கண்ணுதலோன் தனது திருக் கண்டத்தில் படிந்தகறை விண்ணவரை அமுதுாட்டி விளங்குகின்ற கறைஎன்பர்! 17. ஏரெழுபது-12 18. டிெ -13