பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் காட்டும் மேழிச் செல்வம் 113 மண்ணவரை அமுதுTட்டி வானுல்காய் காப்பதுவும் ஏண்ணருஞ்சீர் பெருக்காளர் எருதுசுவல் இடுகறையே' என்று நெற்றிக் கண்ணனின் திருநீலகண்டத்துடன் இணைத் துப் பேசுகின்றன். இதன்பிறகு பகடு பூட்டலின் சிறப்பு ஏர் நடத்தலின் சிறப்பு இவை பேசப்பெறுகின்றன. - உழுதல், பயிரிடல் சிறப்பு : உழவின் சிறப்பினை ஒருவர் சொல்லித் தெரியவேண்டியதில்லை. உண்டி சுருங்கிளுல் இது தானகவே தட்டுப்படும். உழவின் சிறப்பின இன்று நாம் நன்கு உணர்கின்ருேம். உணவுப் பொருள் விற்கப் பெறும் கடையின் முன் க்யூ வரிசையில் நிற்பவர்களின் காட்சியும், உணவு விடுதிகளில் அளவு உணவு உண்பவர் களின் காட்சியும் இதனே நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. 'உலகெலாம் ஒலி விளங்கும் உழவர் உழும் உழவாலே என்று உழவின் சிறப்பினைத் தொகுத்துப் பேசிய கவிஞன் அதனை வகுத்தும் கூறுகின்றன். உழவர்களின் உழுதசால் வழியன்றி உலகு வழி அறியாதே' என்று படைச்சாலின் சிறப்பினைப் பாராட்டுகிருன். உழவுத்தொழிலுக்கு உறுதுணை யாக இருக்கும் மண்வெட்டி வேளாளர் கையில் இருக்கும் வரையில் இவ்வுலகிற்கு ஒரு நாளும் ஒரு குறையும் இல்லே. மெய்வரம்பும் வேதநூல் நெறிவரம்பும் இப்புவிக்கு வரம்பு அன்று என்று சமத்காரமாகக் கூறிய கவிஞன், "பொய்வரம்பு தவிர்த்தருளும் புவிமடந்தை திருமைந்தர் செய்வரம்பு திருத்தாரேல் திசைவரம்பு திருந்தாதே' " 19. எரெழுபது- 25 20. டிெ-23 க.-8