பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置1曼 கம்பனில் மக்கள் குரல் என்று முடிக்கின்றன். இதன் பிறகு எருக்கூடையின் சிறப்புக் கூறப்பெறுகின்றது. நிலத்தின் வளமறிந்து அதனை மேலும் வளப்படுத்தும் பொருட்டு வேளாளர் சேறடிக் கின்றனர். பின்னர் பரம்படிக்கின்றனர். இத ஞ ல் உடைந்து அளேந்த பழனச் சேற்று உரத்தைப் போல நிலத்தை வளப்படுத்தி மணி கொழிக்கும் உரம் வேருென் றும் இல்லை. இத்தகைய நிலத்தில் விளைந்திடும் வித்து நமக்கு வேண்டுவனவற்றையெல்லாம் விளே விக்கு ம். இங்ஙனம் விளைத்த வித்தின் முளே மயங்காமல் செழிக்கு மாயின் திறல்வேந்தரின் நல்லாட்சி மயங்காது; வணிகர் களின் நேர்மை குன்ருது; அந்தணர்களின் அருமறைகள் பொய்க்கா; மனு வகுத்த நீதியும் வழுவாது; இவ்வுலக நடைமுறையும் மயங்காமல் இயங்கும். வேளாளர் விரைவயின், நாறுவிளைத்திடிலன்றி ஞாலமுயிர் வளராதே’’ என்று நாற்றங்கால் சிறப்பு காட்டப்பெறுகின்றது. வேளாளர் குறித்த நாளில் நாற்றைப் பறித்து நட்டு விட்டால் ஞாலத்தினருக்கு ஒருவித கவலையும் இல்லை. இச்செயல் பழுதின்றி நடைபெற்று விடின், வெறுத்துமீன் சனிபுகில்என்? வெள்ளுதெற்கே ஆயிடில்என்?' " என்று வினவுகின்ருன். இது, மைம்மீன் புகையினும் துரமம் தோன்றினும் தென்றிசை மருங்கின் வெள்ளி போடினும் 2 என்னும் புறப்பாட்டடிகளே யொட்டி எழுந்ததாகும். பெருக்காளர் பேணிச் சுமக்கும் நாற்று முடிக்கு வேந்தர் அணியும் மாணிக்கம் முதலாய மணியழுத்திச் சமைத்த 21. ஏரெழுபது0ே 22. புறம் 117