பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் காட்டும் மேழிச் செல்வம் 1 15 ஆணிப்பொன் அணிமுடியும் ஈடாகாது என்று வற்புறுத்திக் காட்டுகின்ருன்; வேளாளர் நாற்றுமுடியைச் சுமவாரேல் அரசரின் செங்கோல் சரிவர நடைபெருது என்று குறிப்பீடு கின்முன். இங்ங்ணம் வேளாளர் சுமந்து செல்லும் நாற்று முடிகள் வயலில் சென்றடையும் சிறப்பு, "தென்னன் முடி சேரன்முடி தேங்குபொனணி நாடன்முடி கணினன்முடி கடல்சூழ்ந்த காசினியோர் தங்கள்முடி இன்னமுடி யன்றியும்மற்(று) எடுத்துரைத்த முடிகள்ளலாம் மன்னுமுடி வேளாளர் வயலின்முடி கொண்டன்ருே?' ' என்ற பாடலால் காட்டப்பெறுகின்றது. வேளாளர் இந்த முடிகளைப் பிரித்து தக்கவாறு நடாவிடில் அந்தணர் மறை ஒதுதலும், புலவர்கள் அருந்தமிழ் நூல்கட்கு விளக்கம் செய்வதும் நடைபெரு என்பது கவிஞனின் குறிப்பு. எனவே, உழவுத் தொழிலே யாவரும் அறிந்து அதனை மேற் கொள்ளல் வேண்டும். "மெய்ப்பாடு படக்கிடந்த வேதநூல் கற்ருல்என்? பொய்ப்பாங்கு படப்பிறரைப் புகழுநூல் கற்ருல் என்? செய்ப்பாங்கு படக்கிடக்த செழுஞ்சாலி நன்ற்ைறைக் கைப்பாங்கு புகுந்துகடக் கற்ருரே கற்ருரே' " என்று கவிஞனும் இதனை வற்புறுத்துகின்முன். இங்கனம் 28. ஏரெழுபது-32 4 3-ې ن@ .24