பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi யும் மனத்தில் இருத்திக் கொண்டதல்ை வாழ்விலும் தாழ் விலும் நெருக்கடி நிலையிலும் சலனமற்ற உள்ளத்தைக் கொண்ட இப்பெருமகனருக்கு இந்நூலே அன்புப் படைய லாக்கி மகிழ்கின்றேன். இவர்தம் ஆசியால் இவர்தம் எல்லா நற்குணங்களும் புலமையும் சமயப் பற்றும் இறையன் பும் என்னே வந்தடையும் என்பது என் அதிராத நம்பிக்கை. என்னுள்னே எனக்குத் தோன்ருத் துணையாக இருந்து கொண்டு என் இதயத்தேரை இயக்கி நன்னெறிப் படுத்தி வருபவன் பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங்கொண் டலாகிய ஏழுமலை அப்பன். அவனே எனக்கு இன்றுவரை உடல் நலத்தையும் மன வளத்தையும் நல்கி வருபவன். என் பிராரப்தம் தீரும்வரையில் இப்படியே என்னை வைத்திருந்து இலக்கியப் பணி, சமயப்பணி, மெய்விளக்கப் பணி, அறிவியல் பணி ஆகியவற்றில் ஈடுபடச் செய்து நாட்டிற்கும், சமூகத்திற்கும் பயன்பட வைப்பான் என்ற நம்பிக்கை என்றும் என்பால் உண்டு. “குன்றம் ஏந்தி குளிர்மழை காத்த’ அந்த எம்பெருமானே மனம் மொழி மெய்களால் வாழ்த்தி வணங்குகின்றேன். இன்ரு அறிகின்றேன் அல்லேன்; இருகிலத்தைச் சென்ருங் களங்த திருவடியை, அன்று கருக்கோட்டி யுள்கிடந்து கைதொழுதேன் கண்டேன் திருக்கோட்டி எங்தை திறம். -பூதத்தாழ்வார். கவேங்கடம்’ } சென்னை-40 哗 将、 哥 11-5-1983 ந. சுப்புரெட்டியார் 5. இரண்டாம் திருவந்தாதி-87