பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் காட்டும் மேழிச் செல்வம் 117 தாங்குகின்றவர்களாகின்றனர் என்பதை வலியுறுத்தவும் வேண்டுமோ? பைங்கழின் சிறப்பு : அடுத்து பைங்கூழின் சிறப்பு பகரப் பெறுகின்றது. பச்சைப் பசேலெனப் பைங்கூழ் தழைத்துக் கோடுகொள்ள வேண்டுமாயின் அதனைச் சூழ்ந்து முளைக்கும் களைகளைக் களைதல் வேண்டும். செஞ்சாவி தழைத்துக் கருவடைந்தால் உலகமெலாம் உயர்ந்தோங் கும்; கலியும் நீங்கும். பைங்கூழ் வளர்ந்து பசுங்கதிர் விடுவ தற்கு வெங்கதிரோனும் தண்மதியும் துணைசெய்கின்றனர். இவர்களின் துணையால் காராளர் வளர்க்கும் கதிர் உயிர் களை வளர்க்கின்றது. இதனைக் கவிஞன், "முதிராதபருவத்தும், முற்றியகற் பருவத்தும் கதிராகி உயிர்வளர்ப்ப(து) இவர்வளர்க்கும் கதிரன்ருே?' ' என்று கூறுகின்ருன். இப்பகங்கதிர் முற்றி நெற்குலையாக வளைதலின் சிறப்பினைக் கவிஞன் மிகச் சமத்காரமாகப் பேசு கின்ருன். செஞ்சாலிக் குலை வளையுங்கால், புவிவேந்தர் அங்கையில் தங்கிய வீரச்சிலை வளைகின்றது; மாரனின் கரும்புச் சிலை வளைகின்றது; கொடுமையான கலியின் தலை யும் வளைகின்றது. ஆனால், அரசனின் செங்கோல் மட்டிலும் வளைவதில்லை. அரிசூட்டின் சிறப்பினைக் கவிஞன், "பீடுவரம் பிடைவயலிற் பிறைவாளிற் கடிக்கின்ற சூடுவரம் பேருதேற் சுருதிவரம் பேருதே ? என்று பாராட்டுகின்ருன். 27. ஏரெழுபது-48 28. டிெ-49 29. டிெ-52