பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 18 கம்பனில் மக்கள் குரல் இங்ங்ணம் விளைந்த நெற்கதிர் அறுவடை செய்யப் பெற்றுக் களத்திற்குக் கொண்டுவரப் பெறுகிறது. இக்களத் தில் வேளாளர் நெல் வடித்துக் குவித்துக் களம் பண்ணுவ தால்தான் சீரான விறல் வேந்தர் செருவிளைத்துச் செல்லு கின்றனர் என்றும், மனுநீதி பிறழாது விளங்குகின்றது என்றும் குறிப்பிடுகின்ருன் கவிஞன். களத்தில் வந்து குவியும் படு சூட்டின் கனத்தினுல்தான் மணம் மிக்க மலர் வானியையுடைய காமன் அடல் சூடுகின்ருன்; கொடிகள் இலங்கும் கோபுரங்கள் பொன் கவசத்தைச் சூடுகின்றன; முடிசூடிய மன்னர்கள் யாவரும் மூவுலகும் மெச்சும் வண்ணம் புகழ்சூடிப் பொலிகின்றனர். செந்நெற் சூட்டினை மிதித் திடுங்கோல்தான் வெம்பகைவர்களின் முரண்கெடுத்து செந்நெறி தழுவிச் செங்கோல் செலுத்தும் கோலாகும்; இக்கோல்தான் கருங்கலியை .ே வ ரு ட ன் அகற்றும் கோலாகும். போக்களத்தையும் ஏர்க்களத்தையும் புறத் துறைப் பாடல்களால் சிறப்பித்துப் பாடுதல் கவிமரபு. இத்தகைய பாடல்களைப் புறப்பொருள் வெண்பா மாலை' என்ற நூலிற் காணலாம். வெண்கொற்றக் கொடையினை மேற்கொண்ட மன்னர்கள் மதயானைகள்படப் பொருத களம்பாடுதலைவிட ஏரியின் வலியால் நெல்குவிக்கும் களம் பாடுதலே சிறந்தது என்பது கவிஞனின் கருத்தாகும். இதற்கு, பார்வேந்தர் பெருஞ்செல்வம் பழுதுபடாது.ஒருநாளும் ஏர்வேந்தர் பெருஞ்செல்வம் அழிவுபடாது இருத்தலினல் தேர்வேந்தர் போர்களத்துச் சிலர்வெல்வர்; சிலர்தோற்பர்; ஏர்வேந்தர் போர்க்களத்துள் இரப்பவரும் தோலாரே' 80. ஏரெழுபது-58