பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் காட்டும் மேழிச் செல்வம் i įg என்று கவிஞன் சமத்காரமாகக் கூறும் காரணம் சுவையு டையது; உண்மையும் ஒருங்கே கொண்டது. தேர்வேந்த ரின் போர்க்களத்தில் தோல்வியும் வெற்றியும் கிட்டும்; ஏர்வேந்தரின் நெற்களத்தில் யாசிப்பவர்கள்கூட தோல்வி யடையார் என்ற நயங்கண்டு மகிழத் தக்கது. உழவர் இணைப்பகடு கொண்டு நடத்திப்படுத்த போர் வையகத்தில் விளங்குவதால்தான் அரசர் இணைப்பகடு நடத்திப் படுத்த போரினைப் பயந்து பார்தாங்கி வாழ்கின்றனர். நெற்குவியலின் சிறப்பு : இங்ஙனம் வேளாளர் உழைப்பி ல்ை விளைந்த நெல் நேற்களங்களில் குவிந்து கிடக்கின்றது. நெல் ஏராளமாக விளைந்து பொலிந்தால், நிலமகட்குப் பொலிவு உண்டாகும்; பொன் பொலிவு பெறும்; தங்கக் கட்டுப்பாடே தேவை இல்லை! நாடும் புகழால் பொலிவு பெறும்; செஞ்சொற்கவிதைகளும் சிறப்புடன் திகழும். நெற்குவித்தலின் சிறப்பைக் கவிஞன், 'தன்னிகரொன்று ஒவ்வாத தலம்வளர்க்கும் பெருக்காளர் மன்னுபெருங் களத்தினிடை மாருதத்தில் தூற்றியிடும் செந்நெல்லைப் பொலிவாலே செம்பொன்மலை எனக்குவித்தே அந்நெல்லின் பொலிவாலே அவனியுயிர் வளர்ப்பாரே' (மாருதம்-காற்று; என்று பாராட்டிப் புகழ்கின்றன். இந்த நெற்குவியலைச் சுற்றி உழவர் தலைவன் கையினில் சிறுகோல் கொண்டு உலா வருகின்றன். கவிஞன் இந்தச் சிறுகோலையும் சிறப் பிக்கின்றன். இக்கோல் சினந்து எழும் கலியைச்செறுக்கும்; நாட்டில் மனு நெறியை உண்டாக்கி வளர்க்கும். அரசர் 81. ஏரெழுபது-86