பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 கம்பனில் மக்கள் குரல் கட்குத் தேவைப்படுங்கால் எப்பொருளையும் கொடுத்து உலகினைப் போற்றிக் காக்கும். இந்த நெல்லின் ஒரு பகு தியே அடுத்த முறை நெல் விளைவதற்கு விரைக் கோட் டையாகின்றது. இந்த விரைக் கோட்டையின் அடிப்படை யில்தான் வேந்தர் கட்டும் கோட்டைகள் அமைகின்றன. இதனைக் கவிஞன், வரைக்கோட்டுத் திணிப்புயத்து வளர்பொன்னித் திருகாடர் விரைக்கோட்டை கொண்டன்ருே வேந்தர்இடும் கோட்டைகளே” என்று குறிப்பிடுகின்ருன். இவ்வுலகில் அரியணையின் மீதி ருக்கும் அரசர்பக்கல் சரியணை இருந்தும் பெறும்பேறு பேறு அன்று; உழவரிடம் பெறும் பேறே உண்மைப்பேறு ஆகும் என்று கூறுவான் கவிஞன், 'அறியா தனத்தின் மேலிருந்தே அம் பொற் குடைக்கீழ் அரசியற்றும் பெரியார் பக்கல் பெறும்பேறும் பேறே அல்ல; பெருக்காளர் சொரியா நிற்பச் சிலர்முகந்து தூற்ரு கிற்கச் சிலர் அளந்து புரியா நிற்பப் பெறும்பேறுக்(கு) அதுகே ரொக்கப் போதாதே': என்று பாராட்டிப் புகழ்கின்ருன். இதனையே வள்ளுவர் பெருமான் இன்னெரு வகையில் சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்று குறிப்பிடுவர். நாமும் இந்நிலையில் மேழிச் செல்வம் வாழ்க! அது கோழைபடாத செல்வமாக என்றும் விளங்குக” என்று வாழ்த்துவோமாக. தேசியகவி பாரதியுடன் சேர்ந்து, 2ே. ஏரெழுபது-56 33. டிெ -58 34. குறள்-1033