பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனில் உருக்காட்சிகள் 128 Images) என்பவை அவை யாகும்"என்று. எண்ணத்திற்கும் புலன் காட்சிகட்கும் குறியீடுகளாக இருப்பவை சொத் களாகும் என்பதை நாம் அறிவோம். ஒரு கவிதையைப் படிக்கும்போது அக்கவிதையிலுள்ள சொற்கள் அல்லது சொற்கோவைகள் சில பல உருக் காட்சிகளை நம் மனக் கன் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. புலன்களின் '-த்தில் தூண்டல்கள் (Stimuti) செய்வதைப் போலவே உருக்காட்சிகளும் கருத்து நிலைச் செயலில் (ideatically) நம் புலன்களைத் தூண்டி நம்மிடம் கவிதையதுபவத்தை எழுப்பிக் கவிதையைத் துய்த்து மகிழ்வதற்குத் துணை யாக அமைகின்றன. மேலும் சில சொற்கள் நம்மிடம் கட்டுண்ட உருக்காட்சிகளையும் (Tied images)"விடுதலை’ உருக்காட்சிகளையும் (free images) எழுப்பி விடுகின்றன: இவையும் கவிதையைப் நுகர்வதற்கு இன்றியமையாத கூறுகளாக (Sin quo non) அமைகின்றன. கம்பராமாயணத்தில் கம்பன் இத்தகைய எண்ணற்ற உருக்காட்சிகளை ஒன்றும் பலவுமாகத் தம்மொடு தாமாகக் கலக்கச் செய்து கவிதைகட்கு மெருகேற்றியுள்ளான்; வேண்டுமென்றே செயற்கை முறையால் அவன் இவ்வாறு செய்வதில்லை. அகாரதியிலுள்ள (நிகண்டிலுள்ள) சொற் களையெல்லாம் மனப்பாடம் செய்துகொண்டு கம்பன் தன் கவிதையில் கையாள்கின்ருன் என்று கருதுதல் தவறு. அவை தாமாகவே வந்து க்யூ வரிசையில் நின்று ஏவல் கேட்டு நிற்கின்றன. இடத்திற்கேற்ப, செய்யுளின் நடைக் கேற்ப, எழுப்ப நினைக்கும் உணர்ச்சிக்கேற்ப, பெற வைக்கும் சுவைக்கேற்பச் சொற்களை யாதொரு தட்டுத் தடையுமின்றி விரைந்து வந்து உதவும் நிலையைக் கவிதை யின் சொல்வளம் (poetic diction) என்று குறிப்பர். இந்தச் சொல்வளத்தின் செழுமைக்கேற்ப பல்வேறு உருக் காட்சிகள் படிப்போர் மனத்தில் கருத்து நிலையில் எழும். எடுத்துக் காட்டாக காதலித்த உருவாகி அறம் வளர்க்கும் கண்ணுளன், (இராவண வதை-202) சிரித்த பங்கயம்’