பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#24 கம்பனில் மக்கள் குரல் (கைகேயி சூழிவினை-50) நினைந்த போதிலும் அமிழ் தொக்கும் நேரிழை (சித்திர கூட-24), அல்லை யாண் டமைந்த மேனி அழகன், (குகப்-42), கன்று பிரிகாராவின் துயருடைய கொடி (டிெ.66,) கொல்லாழி நீத்தாங்கோர் குனிவயிரச் சிலை தடக்கை கொண்ட கொண்டல்’ (மிதிலைக். 154) கரும்பையும் சுவை கைப்பித்த சொல்லியர் (ஊர் தேடு.197) விரிந்த போர் அரக்கரென்னும், கான்சுட முளைத்த கற்பின் கனலி (சூர்ப்பண-58) என்பன போன்ற சொற்கோவை எழுப்பும் உருக்காட்சிகளை எண்ணி மகிழ்க. இனி, சிறப்பாக ஒவ்வொரு புலனையும் பொதுவாக பல புலன்களையும் வரும் உருக்காட்சிகளைக் கண்டு மகிழ்வோம். கட்புல உருக்காட்சிகள் : பல்வேறு வகை உருக்காட்சி களிடையேயும் கட்புலத்தைக் கவரும் உருக்காட்சிகளே அதிகமாகவுள்ளன. இவையே படிப்போர் மனத்தில் நிலையான பதிவினை விளைவிக்கின்றன. கட்புல நரம்பு ஏனைய புல நரம்புகளைவிடத் தடித்திருப்பதே இதற்குக் காரணம் எனக் கருதலாம். இதன் காரணமாக இக்காலக் கல்வியில் கட்புல.செவிப்புலத் துணைக் கருவிகள் (Audio visual aids) அதிகமாகப் பயன்படுத்தப்பெறுகின்றன. கட் புலனைக் கவரும் ஒரு சில உருக்காட்சிகளை ஈண்டுக் காண்டோம், கண்டனன் என்ப மன்னோ கதிரவன் சிறுவன் காமர் துண்டலம் துறந்த கோல வதனமும் குளிர்க்கும் கண்ணும் புண்டரி கங்கள் பூத்துப் புயல்தழீஇப் பொலிந்த திங்கள் மண்டலம் உதயம் செய்த மரகதக் கிரிய ஞனேசி .ே கிட்கிந்-மராடிரப்-55