பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 கம்பனில் மக்கள் குரல் கரியணுய் வெளியன் ஆகிச் செய்யனுய்க் காட்டும் காண்டற்(கு) அரியனும் எளியன் ஆய்த்தன் அகத்துறை அழக னேபோல்" |நாள். நட்சத்திரம்; பித்திபத்தி - சுவர்களின் வரிசைகள்; காலின்தோன்றல் - வாயு மகன்; அழகன் - திருமால்) அநுமன் இலங்கையில் சீதையைத் தேடிச் சென்ற போது மாடங்களின் சுவர்களில் பதிப்பிக்கப் பெற்ற நவமணிகளின் ஒளியினல் பல்வேறு நிறங்களில் அவன் திருமேனி தோன்றுவதைக் காட்டும் பாடல் இது கரியணுய், வெளியன ய், செய்யனாய், அகத்துறை அழகன் இவை கட்புலத்தைக் கவரும் உருக்காட்சிகளாகும். வற்கலையின் உடையான மாசடைந்த மெய்யானே நற்கலையின் மதியென்ன நகையிழந்த முகத்தானைக் கற்கனியக் களிகின்ற துயரானக் கண்ணுற்ருன் விற்கையினின்று இடைவீழ விம்முற்று நின்பொழிந்தான்" (வற்கலை - மரவுரி; மாசு - புழுதி; விம்முற்று - செயலாற்று) இப்பாடல் இராமனே மீட்டுச் செல்ல வந்த பரதனைக் குகன் காணும் நிலையைக்கூறுவது. வற்கலேயின் உடையான், மாசடைந்த மெய்யான், நகை இழந்த முகத்தான், 4. சுந்தர. ஊர்தேடு.102 5. அயோ. குகப்-2'