பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனில் உருக்காட்சிகள் 盟父? கற்கனியக் கணிகின்ற துயரான் ஆகிய இவை கணிகின்ற துயரான ஆகிய இவை கண்ணிற்குக் காணப் பெறும் உருக்காட்சிகள்; வில் கையினின்று வீழல் இயக்கநிலை உருக்காட்சியாகும். இக்கலவை உருக்காட்சி கண்ணுக்குக் களிப்பினை நல்குவதாக அமைகின்றது. கண்ணுற்ருன் வாலி நீலக் கார்முகில் கமலம் பூத்து மண்ணுற்று வரிவில் ஏந்தி வடுவதே போலும் மாலை" என்பது அம்பு பாய்ந்த நிலையில் வாலி தன் முன் வரும் இராமபிரானைக் காண்பதைத் தெரிவிப்பது. இதில் கமலம் பூத்த நீலக் கார்முகில், வரிவில் ஏந்தி மண்ணிற்கு வருதல் இவை இரண்டும் கட்புல உருக்காட்சிகளாகும். வெய்யோன் ஒளி தன்மேனியின் விரிசோதியின் மறையப் பொய்யோவெனும் இடையாளொடும் இளையா ளுெடும் போளுன் மையோமர கதமோ மறி கடலோமழை முகிலோ ஐயோ.இவன் வடிவென்பதோர் அழியாஅழ குடையான்" கானாளப் புக்க இராமன் தன் இள வலோடும் சீதாப்பிராட்டியோடும் செல்லுவதைக் காட்டுவது இப் பாடல். வெய்யோன் ஒளி, தன் மேனியின் விரிசோதி, பொய்யோ எனும் இடை, மை, மரகதம், மறிகடல், மழை முகில் - இவையெல்லாம் கட்புல உருக்காட்சிகள்; அழியா அழகு டையான்...போனன் என்பது இயக்கப்புல உருக் காட்சியாகும். 6. கிட்கித். வாலிவதை-75 7. அயோத். கங்கை-1