பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனில் உருக்காட்சிகள் 129 நகருக்கு எழுந்த நிலையைக் காட்டும் பாடல்களில் ஒன்று. இதில் தேர் செல்லல், களிறு செல்லல், குதிரை செல்லல், வரிசையாக முரசங்கள் அடிக்கப்பெறுதல் ஆகிய இவை கட்புல உருக்காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட செவிப்புல உருக்காட்சிகளாகும். மண்ணும் முழவின் ஒலிமங்கையர் பாடல் ஓதை பண்ணும் நரம்பிற் பயிலாவிசைப் பாணி யோதை கண்ணும் உடைவே இசைகண்ணுளர் ஆடல் தோறும் விண்ணும் மருளும் படிவிம்மி எழுந்த(து) அன்றே.' (முழவு-மத்தளம்; ஒதை ஓசை; பாணி.கை; கண். கணுக்கள்; வேய்.புல்லாங்குழல்; மருள் தல்.திகைப்படைதல்; விம்மி.மிகுதியாக) தசரதனின் சேனை சந்திரசைலம் என்னும் மலையைக் கண்டதாகக் கூறும் பகுதியில் வரும் ஒரு பாடல் இது. முழவின் ஒலி, மங்கையர் பாடும் ஒலி, நரம்பின் பயிலா இசை, பாணி (தாள) ஒலி, வேயின் இசை ஆகியவை செவிப்புல உருக்காட்சிகள்; கண்ணுளர் ஆடல் இயக்கப் புல உருக்காட்சியாகும். கலவை உருக்காட்சி கண்ணிற்கும் காதிற்கும் விருந்தாக அமைகின்றது. வார்முகம் கெழுவுகொங் கையர்கருங் குழலின்வண்(டு) ஏர்முழங் கரவமேழ் இசைமுழங் கரவமே, 10. பால. வரைக்-74 است ه به