பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 கம்பனில் மக்கள் குரல் தேர்முழங்கு அரவம்வெண் திரைமுடங் கரவமே, கார்முழங் கரவம்வெம் கரிமுழக் கரவமே.' (அரவம்-ஒலி; கார்-மேகம்; திரை-கடல்; கரி. urráম ] தசரதனைச் சனகன் எதிர்கொண்டழைத்தலைக் கூறும் பகுதியில் வரும் பாடல் இது. இதில் மகளிரின் கூந்தலில் வண்டுகள் செய்யும் ஒலி, ஏழிசை (பலவகை வாத்தியங் களின் ஒலி, தேர்களின் ஒலி, கடல் ஒலி, முகில்கள் உண்டாக்கும் ஒலி, யானைகள் பிளிறும் ஒலி ஆகிய இவை செவிப்புல உருக்காட்சிகளாகும். - கீதங்கள் இசைத்தனர் கின்னரர்; கீதம் கின்ற பேதங்கள் இயம்பினர் பேதையர் ஆடல்; பின்னர்ப் பூதங்கள் தெரடர்ந்து புகழ்ந்தன; பூசு ரேசர் வேதங்கள் இயம்பினர்; தென்றல் விருந்து செய்த' (பேதங்கள்.இசை விகற்பம்; பூசுர ஈசர்-இருடிகள் பூதங்கள்.பலவகைப் பிராணிகள்) இது சுரசையின் வயிற்றில் புகுந்து மீண்டு வந்த அநுமனது செயலைப் பலரும் பல வகையாகக் கொண்டாடுதலைத் தெரிவிக்கும் பாடல். கின்னரர் இசைத்த கீதங்கள், தேவ மாதர்களின் இசை விகற்பங்கள், பிராணிகளின் புகழ்ச்சி, இருடிகள் இயம்பும் வேத ஒலி இவை யாவும் ச்ெவிப்புல 21. பால எதிர்கொள்.9 12. சுந்தர கடல்தாவு:73