பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனில் உருக்காட்சிகள் 131 உருக்காட்சிகள்; தென்றலின் விருந்து நொப்புல உருக் காட்சியை அடிப்படையாகக் கொண்ட இயக்கப் புல உருக்காட்சியாகும். கொப்புல (தொடுபுல) உருக்காட்சிகள்: இந்த வகை உருக்காட்சிகளில் சிலவற்றைக் காண்போம். சுழலிடும் கூந்தலும் துகிலும் சோர்தரத் தழலிடு வல்லியே போலச் சாம்பினுள்' [துகில்-சேலை; தழல்-நெருப்பு: வல்லி-பூங்கொடி, சாம்புதல்-வாடுதல்) இராமனேக் கண்ட பிறகு சீதை படும் விரக தாப நிலையைக் காட்டுவது இப்பாடல். நெருப்பில் போடப்பெற்ற பூங்கொடி வாடுதல் நொப்புல உருக்காட்சியாகும். அன்ன ளாகிய சானகி இவளென அயிர்த்து அகத்தெழு வெந்தீத், துன்னும் ஆருயிர் உடலொடும் சுடுவதோர் துயரு ழந்திவை சொன்னான்' (அயிர்த்து - சங்கித்து; வெந்தி - கோபாக்கினி, துயர்.துன்பம்; உழந்து-வருந்தி) மண்டோதரியை மைதிலி என மயங்கிய மாருதியினது நிலையைக் கூறுவது இப்பாடல். சினத்தி உடலைச் சுடுவது நொப்புல உருக்காட்சியாகும். காற்றப்புல உருக்காட்சிகள் : இவையும் கவிதையை நுகர்வதற்குத் துணை செய்வனவாகும். 13. பால. மிதிலே- 3 14. சுந்தர. ஊர்தேடு-199