பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 கம்பனில் மக்கள் குரல் அலவு தண்துளி அருவிர்ே அரம்பையர் ஆடக் கலவை சாந்துசெங் குங்குமம் கற்பகம் கொடுத்த பலவும் தோய்தலில் பரிமளம் கமழ்வன பாராய்." |அலவு-அசைகின்ற; அரம்பையர்.தேவ மகளிர்; பரிமளம்.வாசனை, கமழ்தல்-வீசுதல்) இஃது இராமன் சீதைக்குக் காட்டும் சித்திர கூடக் காட்சி களில் ஒன்றினத் தெரிவிக்கும் பாடல். அருவி நீரில் கலந்து வரும் பல நறுமணப் பொருள்கள் தரும் வாசனை யைத் தெரிவித்தல் நாற்றப்புல உருக்காட்சியாகும். வானி ழுக்கும் ஏல வாச மன்றல் காறு குன்றமே." இழுக்கு-கவடுகின்ற) அதுமனுடன் இராம இலக்குமணர் வாலி இருக்கும் இடத்தை நாடி ஒரு மலைச்சாரலின வழியாகச் செல்லு வதைக் கூறுவது இப்பாடல்: மலையின் தன்மையைப் பாடல் விளக்குகின்றது. ஏலவாச மன்றல் நாறு குன்றம் என்ப தால் நாற்றப்புல உருக்காட்சி காட்டப்பெறுகின்றது. சாந்த ளாவிய கலவைமேல் தவழ்வுறு தண்டமிழ்ப் பசுந்தென்றல்." இஃது இராவணன் படுத்திருந்த நிலையை அநுமன் காண்டலைக் கூறுவது. இராவணன் மேனியின் மீது பூசப் பெற்ற சந்தனக் கலவை நாற்றப்புல உருக்காட்சியையும் 15. பால. சித்திர-25 16. கிட்கிக்.கலங்காண்.41 17. சுந்தர. ஊர்தேடு-210