பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனில் உருக்காட்சிகள் 183 தண்டமிழ்ப் பசுந்தென்றல் தவழ்வது ஊற்றுப்புல (நொப் புல) உருக்காட்சியையும் உணர்த்துகின்றன, சுவைப்புல உருக்காட்சிகள் இவையும் கம்பன் பாடல் கட்குச் சுவையூட்டுகின்றன. 'அறுசுவைத் தாய உண்டி அரசர்கின் அணிகத் தோடும் பெறுக என அளித்து வேந்தோ(டு) யாவரும் துய்த்த பின்றை நறுமலர்த் தாரும் வாசக் கலவையும் நல்கலோடும்" (அணிகம்.சேனை மக்கள்; தார்-மாலை; வாசக் கலவை.நறுமணமுள்ள கலபைச் சந்தனம்} வசிட்டனின் காமதேனு விசுவாமித்திரனின் சேனக்கு விருந்துாட்டினதைக் காட்டுவது இப்பாடல். அறுசுவைத் தாய உண்டி சுவைப்புல உருக்காட்சியையும், நறுமலர்த் தார் வாசக் கலவை நாற்றப்புல உருக்காட்சியையும் தெரி விக்கின்றன. வேற்களுர் குமுதச் செவ்வாய் வாலெயிற்(று) ஊறும் தீந்தேன் மாந்தினர் மயங்கு வாரை’ அநுமன் இலங்கையில் சீதையைத் தேடிச் சென்றபோது அரக்கியர் முதலிய பற்பலர் இருந்த நிலையைக் காட்டுவது இப்பாடல். வாலெயிறு உனது இந்தேன் மாந்துதல் சுவைப் புல உருக்காட்சியை உணர்த்துவதாகும். சித்திர பத்தியில் தேவர் சென்றனர் இத்துணைத் தாழ்ந்தனம் முனியும் என்றுதம் 18. பாலகா. மிதி-ை94 19. சுத்தர. ஊர்தேடு-148