பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனில் உருக்காட்சிகள் 185 அசைவதைக் குறிப்பிடும் பாடல்'இது. கொடிகள் அசைவது இயக்கப்புல உருக் காட்சியாகும். மரபு நிலை உருக்காட்சிகள் : மரபு வழியாக வரும் கருத்துகளைப் புலப்படுத்தும் நிலையிலமைந்தவை இவை. இவற்ருலும் பாட்டின்பம் மிகுகின்றது. வயிரவான் பூணணி மடங்கல் மொய்ம்பினுன் உயிரெலாம் தன்னுயிர் ஒப்ப ஓம்பலால் செயிரிலா உலகினில் சென்று நின்றுவாழ் உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினுன்,' (வயிரம் - வச்சிரம்: மடங்கல் சிங்கம்; மொய்ம்பு. வலிமை) இப்பாடல் தசரதன் நாடுகாத்தலேக் கூறுவது. உயிரெ லாம் உறையும் உடம்பு ஆதல் மரபு நிலை உருக் காட்சி யாகும். சரயுநதியின் வெள்ளம் சென்று பரவி தோட்டம் தோறும் பாய்ந்தலே மூன்று மரபு நிலை உருக்காட்சி களால் விளக்குகின்ருன் கம்பன். செல்லுறு கதியிற் செல்லும் வினையெனச் சென்ற தன்றே: இதில் நால்வகைக் கதியிலும் செல்லும் வினை என்பதில் மரபு நிலை உருக் காட்சி வந்துள்ளமையும் (வெள்ளம்) சென்றது என்பதால் இயக்கப் புல உருக் காட்சியும் வந்துள் ளமை கண்டு மகிழத்தக்கது. 28. பால. அரசியல்.10 24. டிெ. ஆற்றுப்-17