பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கம்பனில் மக்கள் குரல்* 1 கினைப்பிற்கும் எட்டாத நெடுங்காலமாகவே இவ்வுல கெங்கணுமுள்ள நாடுகளில் கோட்ைசியே நிலவி வந்திருக் கின்றது. அரசர்கள் தம் கடமைகளில் தவறியதாலும் குடிமக்கள் அறிவு மிகுந்ததாலும் காலப்போக்கில் மக்க ளாட்சி என்ற கருத்து முகிழ்த்து நிலைபெற்றுவிட்டது. பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டில் அரசோச்சிய சேரன் செங்குட்டுவன், மழைவளம் கரப்பின் வான்பே ரச்சம் பிழையுயி ரெய்தின் பெரும்பே ரச்சம் குடிபுர வுண்டும் கொடுங்கோ லஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்ப மல்லது தொழுதகவு இல்' என்று தன் பொறுப்பை உணர்ந்ததுபோல் எத்தனைப் பேர்

  • ஜனநாயகம் (நவம்பர்-டிசம்பர் 1958) இதழ்களில் வெளி வந்தது.

1. சிலப்-காட்சிக்-அடி (100-194)