பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனில் உருக்காட்சிகள் 18? |தாது உகு.மகரந்தம் சிந்தும்; போது-அரும்பு; மாதவி.குருக்கத்தி: பூகம்; வனம்.கமுகம் தோட்டம்) சரயு வெள்ளம் பல இடங்களில் உலாவியுள்ளதைக் காட்டும் பாடல் இது. சோலைகள், காடுகள், போய் கைகள், தடாகங்கள்,கமுகம் தோட்டம்,வயல்கள் இவற்றில் வெள்ளம் உலாவியிருப்பது உடம்புகள் தோறும் உயிர் புகுந்திருப்பதை உணர்த்துகின்றது. உயிர் உடம்புகள் தோறும் புகுந்திருப்பது மரபு நிலை உருக்காட்சியாகும்; வெள்ளம் உலாவுதல் இயக்கப்புல உருக்காட்சியாகும். உருக்காட்சிகளின் கலவை : பெரும்பாலும் உருக் காட்சிகள் தனித்து வருதல் அருமை; அவை கலவை யாகவே கவிதைகளில் அமைந்து அவற்றிற்கு மெரு கூட்டுகின்றன. தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்கக் கொண்டல்கள் முழலின் ஏங்கக் குவளை கண் விழித்துநோக்கத் தெண்திரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ' (கொண்டல்-மேகம்; முழவு-மத்தளம்; திரை. அலை; எழினி-திரைச்சீலை; தேம்பிழி-இனிய தேனையொத்த} இது மருத நிலம் என்ற மன்னன் கொலுவீற்றிருக்கும் காட்சியைக் காட்டும் பாடலாகும். மயில்கள் ஆடுதல் இயக்கப்புல உருக்காட்சி; தாமரை விளக்கம் தாங்குதல், 27. பால. நாட்டு-4,