பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 கம்பனில் மக்கள் குரல் குவளை கண் விழித்து நோக்குதல், தெண் திரை எழினி காட்டுதல் இவை கட்புல உருக்காட்சிகள்; கொண்டல் ஒலித்தல், வண்டுகள் இனிமையாகப் பாடுதல் இவை செவிப்புல உருக்காட்சிகள். இவை கலந்துநிற்கும் நிலை யில் கவிதை அநுபவம் கொடுமுடியை எட்டிவிடுகின்றது. கம்பனில் காணப்பெறும் உருக்காட்சிகளையெல்லாம் வேறுவிதமாகவும் தொகுத்து ஆராயலாம். இறைமைபும் தத்துவமும் - இதில் பல்வேறு பொருள்கள்; வான் பொருள்கள்.கதிரவன் முதலிய பல; இயற்கை-மலை கடல் முதலியவை; பல்லுயிர்கள்.விலங்கு, பறவை முதவி யவை; பொதுநிலை-அமுதம்-நஞ்சு, ஒவியம், ஊழ், கூற்று வன், அடைமொழிகள், நுண்பொருள்கள், உலகியல் முறைகள்: இங்ஙனம் காண்டல் ஒரு பெரிய ஆய்வு நூலாக வடிவெடுக்கும். இவையெல்லாம் கவிதையநுபவத்தைப் பெருக்குவதற்குக் கவிஞன் கையாலும் உத்திகளாகும். இவற்றைஅமைப்பதில் கம்பனுக்கு நிகர் கம்பனேயாவான்.