பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 கம்பனில் மக்கள் குரல் உணர முடியும்? அரசர்கள் தம் கடமைகளை உணராமல் உரிமையை நிலைநாட்ட முயன்ற பொழுதுதான் மக்க ளாட்சி' என்ற வித்து இந்த மானிலத்தில் ஊன்றப் பெற்றது. பண்டைய அரசர்கள் தம் பொறுப்புகளைப் பெரிதும் உணர்ந்திருந்தமையால், புறநானூற்றுப் புலவர் ஒருவர், "நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்" என்று பாடினர்; மன்னன்தான் நாட்டின் உயிர் என்ற அக்காலக் கொள்கையை வெளியிட்டார். மேற் கூறிய பாடலடிகளினுல் அக்கால மக்கள் அரசனே உயிர்போல் போற்றி வந்தனர் என்பதை அறிகின்ருேம். காலப் போக்கில் மக்கள் குரலுக்கு மதிப்பு ஏற்பட்டது. பன்னி ரண்டாம் நூற்ருண்டில் வாழ்ந்த கம்பன் மக்கள் குரலுக்கு மதிப்புக் கொடுத்து, "வையம் மன்னுயி ராக.அம் மன்னுயிர் உய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னன்' என்று பாடினன்; மாநிலத்தில் வாழும் மக்களே உயிராக்கி மன்னனே அவ்வுயிரைத் தாங்கும் உடலாக்கிவிட்டான். இன்னும் ஓரிடத்தில் தசரதன் நாட்டைப் பாதுகாத்தமை யைக் கூறவந்த கவிஞர் பெருமான், வயிரவான் பூண் அணிமடங்கல் மொய்ம்பினுன் உயிரெலாம் தன்னுயிர் ஒப்ப ஓம்பலால் செயிரிலா உலகினில் சென்று கின்றுவாழ் உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினன்." என்று காட்டுகின்ருன். இதிலும் அரசனே உடலாகவும் .ே புறம்.185 3. அயோத்-மந்தரை.17 சி. பாலகா-அரசியல்.10