பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனில் மக்கள் குரல் § மக்களே உயிராகவும் காட்டியுள்ளமை எண்ணி மகிழ்தற் குரியது. மக்களுக்காக மக்களால் மக்களாட்சி என்று அமெ ரிக்க நாட்டு ஆப்ரஹாம்லிங்கன் குரல் எழுப்புவதற்கு முன்னரே கம்பநாடன் மக்களே நாட்டின் உயிர் நாடி என்ற குரலே எழுப்பிவிட்டான். கம்பன் காட்டும் கோசலத் தில் அரசர்களாக இருந்தவர்களும் மக்கள் குரலுக்கு மதிப்புக் கொடுக்கும் மன்னர்களாகவே வாழ்ந்து வந்தனர். உயிர் இல்லாத வழி உடல் இல்லாதது போல, குடிமக்கள் இல்லாத வழி அரசனும் இல்லை யாதலின் உலகை அரச னுக்கு உயிர் எனக் கூறியுள்ள மதி நுட்பம் மக்களாட்சியில் வாழும் நமக்கு ஒரளவு நன்கு புலனுகின்றது. . கம்பன் காவியத்தில் நாம் நான்கு அரசுகளைக் காண் கின்ருேம்; நான்கும் கோட்ைசியே. இந்த நான்கிலும் மன்னன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைப் பொதுமக்கள் திறய்ைவதைக் காண்கின்ருேம். முப்பதாண்டுகளுக்கு மேல் மக்களாட்சியில் பழகி, அரசினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் திறனயும் நமக்கு, அரசாங்க அலுவல் களைப் பொதுமக்கள் எந்த அளவுக்குத் திறயை முடியும் என்பது விளங்காமற் போகாது. கோட்ைசியாக இருந் தாலும், பொதுமக்கள் அரசாங்க விஷயங்களிலும் அரசன் சம்பந்தப்பட்ட பிற துறைகளிலும் ஒரளவு பங்கு பெற்று இருந்தனர். முடியாட்சியாக இருந்தாலும், அரசனும் தான் மக்களுக்காகவே இருப்பதாக உணர்வதையும் மக்களும் தமது நிலைமையை ஒரளவு நன்கு உணர்ந்திருப் பதையும் கம்பன் நமக்கு இலைமறை காய்கள் போல் ஆங்காங்குச் சுட்டியுரைக்கின்றன். இனி, அவ்வாறு அவன் சுட்டி யுரைக்கும் இடங்களைக் காண்போம். 2 காவியத்தில் நாம் முதன் முதலாகக் காண்பது அயோத்தி அரசு. எடுத்த எடுப்பில் அரசனைக் காட்டும் கவிஞன்,