பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கம்பனில் மக்கள் குரல் தாயொக்கும் அன்பில், தவம்ஒக்கும் கலம்ப யப்பில்; சேயொக்கும் முன்னின் (று) ஒருசெல்கதி யுய்க்கும் நீரால், நோயொக்கும் என்னில் மருந்துஒக்கும்; நுணங்கு கேள்வி, ஆயப் புகுங்கால் அறிவுஒக்கும் எவர்க்கும் அன்ன்ை என்று கூறுகின்ருன். தயரதன் குடிமக்களிடம் காட்டிய அன்பு தாயன்புடன் ஒக்கும்; மக்களுக்கு அவன் செய்து வரும் நன்மைகளினல் அவன் தவத்தை யொத்திருப்பான்; நல்ல கதியில் செலுத்துவதில் மைந்தனை யொப்பான்; தீயோரை ஒறுத்தலில் நோயை ஒப்பாயிைனும், தண்ணளி செய்தலில் மருந்தையும் ஒப்பான்; நுட்பமான நூல்களை ஆராயப் புகுமிடத்து, ஐயந்திரிபுகளைத் தெரிவிக்கும் அறிவை யொப்பான். இங்ங்னம் குடிதழிஇக் கோலோர் கம் தயரதன் நாடு புரத்தலேக் கூறுமிடத்து, வையகம் முழுவதும் வறிஞன் ஓம்புமோர் செய்யெனக் காத்தினி(து) அரசு செய்கின்ருள்: என்று காட்டுகின்ருன். மூலதனமில்லாத உழவன் தனக்கே உரித்தான சிறு கழனியை எங்ங்னம் மிகக் கருத்துடனும் பொறுப்புடனும் பாதுகாக்கின்ருனே, அங்ங்னம் உலகம் முழுவதையும் காத்து வருகின்ருன் தயரதன். அவனு டைய மகளுகிய இராமனும் குடிமக்கள் உள்ளத்தையெல் லாம் கொள்ளே கொண்டவன். இதனை வசிட்டன் வாயில் வைத்து, - 'கற்றவர் கற்றிலா தவரும் உண்ணு நீரினும் உயிரினும் அவனையே உவப்பார்' என்று கவிஞன் பேசுகின்முன். இதனால் இராமன்-தயர தனுக்குப் பிறகு பாராளவேண்டியவன்-குடிமக்களிடம் 器。 பாலகா-அரசியல்-4 6. (ඩෑ. டிெ 12 ?. அயோ-மந்திரம்:42