பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனில் மக்கள் குரல் எவ்வளவு செல்வாக்குடன் திகழ்ந்தான் என்பதை அறி கின்ருேம். தயரதன் இராமனுக்கு முடிசூட்ட நினைக்கின்ருன். மந்திரக் கிழவர்களை வருவித்து, அவர்களுடன் கலந்து ஆலோசிக்க எண்ணுகின்ருன். உடனே மந்திரக் கிழவரை வருக என்றேவினன். மக்களுடன் தன்னைவிட நன்கு பழகும் அமைச்சர்களை யோசனை கேட்பதால், மக்களையே கேட்ட தாகும் என்று எண்ணியே மந்திரிமார்களுடன் சூழ்ந் தெண்ண நினைக்கின்ருன்; அதன் பிறகும் சிற்றரசர்களுக்கும் ஒலை போக்கித் தன் கருத்தை தெரிவிக்கின்ருன், அமைச்ச ரவையும் வேத்தவையும் இராமன் முடி புனைதற்கு ஒரு முக மாக உடன்பாட்டைத் தெரிவிக்கின்றன. அரசர்களைப் பார்த்துத் தயரதன் பேசும் பேச்சு நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றது. செம்மையில் தருமத்தில் செயலில் தீங்கின் பால் வெம்மையின் ஒழுக்கத்தின் மேன்மை மேவிலீர்! என்மகன் என்பதென்? நெறியின் ஈங்கிவன் நும்மகன் கையடை நோக்கும் ஈங்கென்ருன்சி இவனை என் மகன் என்று எண்ணவேண்டா நும்மகன் போலவே கருதி, இவனுக்கு யாதொரு குறையும் வராமல் பாதுகாத்து வாருங்கள்’ என்று கூறும் மன்னர் மன்னன் வாக்கில் மக்களாட்சியின் பண்பு மிளிர்வதைக் காணலாம்; மக்கள் குரலுக்கு எவ்வளவு மதிப்பு தருகின்றன் என்பதை யும் அறியலாம். இராமன் முடி புனேயப் போகின்ருன் என்ற செய்தி மக்களுக்கு எட்டுகின்றது. மக்கள் பேருவகை கொள்ளு கின்றனர். இளைஞர்கள் யாவரும் அடைந்த மகிழ்ச்சியைக் கம்பன், 8. அயோ-மத்திர.87