பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கம்பனில் மக்கள் குரல் பொங்கிய உவகை வெள்ளம் பொழிதரக் கமலம் பூத்த கங்கையின் முகத்தார் கம்பி தம்பியர் அனைய ராஞர்" |சங்கை-குற்றம்} என்று காட்டுகின்ருன். இளைஞர்கள் இராமன் தம்பியர் அடைந்த மகிழ்ச்சியை அடைந்தார்களாம்; வயது முதிர்ந்த வர்கள் பெற்ற மகிழ்ச்சி தயரதன் அடைந்த மகிழ்ச்சியைப் போலிருந்தது. அவ்வூர்ச் சாதுகை மாந்தர் எல்லாம் தயரதன் தன்னை யொத்தார்" (சாதுகை-சற்குணம்) என்பது கம்பனின் வாக்கு. இங்ங்னம் இன்பத்தில் பங்கு கொண்ட மக்கள் இராமனுக்குத் துன்பம் வரும்பொழுதும் பங்கு கொள்ளுகின்றனர். இராமன் மகுடம் புனைதலுக்குத் தடை நேர்ந்து விட்டது என்பதை ஊர்மக்கள் அறிகின்றனர்; இராமன் காஞளப் போகின்ருன் என்ற செய்தியும் அவர்கட்கு எட்டு கின்றது. வசிட்டன் இச் செய்தியை அரசவையில் அறிவிக் கின்ருன். இந்தக் கட்டத்தில் மக்கள் எழுப்பும் குரல் மயிர்க்கூச்செறிய வைக்கின்றது; தாங்கமுடியாத வருத் தத்தை அடைகின்றனர். கவிஞன் கூற்றில் சிலவற்றைப் பார்ப்போம். புண்ணுற்று தீயில் புகையுற்று உயிர்பதைப்ப மண்ணுற்று அயர்ந்து மறுகிற்று, உடம்பெல்லாம் கண்ணுற்று அவாரி கடலுற்றது; அந்நிலையே விண்ணுற்றது எம்மருங்கும் விட்டழுத பேரோசை. ஆ ஆ அரசன் அருளிலனே யாம் என்பார்: காவாது அறத்தைஇனிக் கைவிடுவோம் யாம்என்பார்; தாவாத மன்னர் தலத்தலைவீழ்ந்து ஏங்கினர்; மாவாதம் சாய்த்த மராமரமே போல்கின்ருர், $3. அயோத்-கைகேயி சூழ்.65 10. டிெ டிெ -66