பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனில் மக்கள் குரல் f மண்செய்த பாவம் உளது என்பார் மாமலர்மேல் பெண்செய்த பாவம் அதனிற் பெரிதுஎன்பார்: புண்செய்த நெஞ்சை விதி என்பார் பூதலத்தோர் கண்செய்த பாவம் கடலில் பெரிதுஎன்பார். ஆளான் பரதன் அரசுஎன்பார்: ஐயன்இனி மீளான் நமக்கு விதிகொடிது காண்என்பார்; கோளாகி வந்தவா கொற்றமுடி தான்என்பார்: மாளாத நம்மின் மனம்வலியார் ஆர்என்பார். ஆதி அரசன் அருங்கே கயன்மகள்மேல் காதல் முதிரக் கருந்தழித்தான் ஆம் என்பார்: சீதை மணவாளன் தன்ளுேடும் தீக்கானம் போதும்; அதுவன்றேல் புகுதும் எரிஎன்பார். கையால் கிலந்தடவிக் கண்ணிர் மெழுகுவார் உய்யாள்பொற் கோசலஎன்று ஒவாது வெய்துயிர்ப்பார் அய்யா, இளங்கோவே ஆற்றுதியோ நீ! என்பார்; நெய்யார் அழல்உற்றது உற்ருர்அந் நீள்ககாார். நின்று தவம்இயற்றித் தான்தீர தேர்ந்ததோ: அன்றுஇவ் உலகத்துள் ஆருயிராய் வாழ்வாரைக் கொன்று களையக் குறித்த பொருளொன்ருே: நன்று வரங்கொடுத்த நாயகற்கு நன்றென்பார். பெற்றுடைய மண்அவளுக்கு ஈந்து பிறந்துஉலகம் முற்றுடைய கோவைப் பிரியாது, மொய்த்தீண்டி உற்றுஉறைதும்; யாரும் உறையவே சின்னுளில் புற்றுஉடைய காடுஎல்லாம் நாடாகிப் பேரம்என்பார். என்னே நிருபர் இயற்கை இருந்தவா! தன்னேர் இல்லாத தலைமகற்குத் தாரணியை முன்ன்ே கொடுத்து, முறைத்திறம்பத் தம்பிக்குப் பின்னே கொடுத்தால் பிழையாதோ மெய்! என்பார்* இவ்வாறு மக்கள் தம் அறிவு நிலைக்கேற்பவும் உணர்ச்சி 11. டிை நகர் நீங்-97, 99, 105, 106, 107, 108,110:1:11, 1. i2. -