பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கம்பனில் மக்கள் குரல் நிலைக் கேற்பவும் பலவாறு தயரதன் செயலேயும் இராமன் நிலையையும் திறனய்வதைக் கவிஞன் நமக்கு நேரில் காட்டுவதுபோல் காட்டுகின்றன். அரசன் அறத்தைக் கைதழுவ விட்டுவிட்டான் என்று அரசியல் பேசுவோர் ஒலர் வினைப்பயனை நொந்து கூறுவர் சிலர்; பரதன் ஆளமாட்டான்' என்று மனம்பதைத்துக் கூறுவோர் சிலர்: இழட்டு அரசன் இளையாள்மீது கொண்டுள்ள மோகத்தால் கருத்தழித்து விட்டான் என்பார் சிலர்; இலக்குவன் நிலை யையும் அவன் இராமன்பால் கொண்ட அன்பையும் கண்ட சிலர் இளங்கோவே பொறுக்க முடிகின்றதா?’ என்று வாய்விட்டுக் கதறுவர்; வரங்கொடுத்த இலட்சணம் நன்ருக இருக்கின்றது?’ என்று உலகியலை யொட்டிப் பேசுவர் சிலர்; நாம் எல்லோரும் காட்டிற்குச் சென்று விட்டால் அங்கே நகரம் உண்டாகிவிடும் என்று புரட்சிக் கருத்துத் தெறிக்கப் பேசுவர் சிலர்; முன்னவனுக்கு அரசை முதலிற் கொடுத்து பின்னர் அதைப் பின்னவனுக்குக் கொடுத்தால் அது முறை திறம்பிய செயல் ஆகாதா? என்று சிலர் கூறுவர். சிந்தனையுள்ளவர்கள் எல்லோரும் பேசுவதைக் காட்டிய கவிஞன் ஒன்றும் அறியாப் பேதை யரும் பிறரும் இராமன்பால் கொண்டிருந்த அன்பையும் காட்டுகின்ருன். கின்ளேயொடு பூவை யழுத; கிளர்மாடத்து உள்ளுறையும் பூசை அழுத உறுவறியாப் பிள்ளை அழுத; பெரியோரை என்சொல்ல வள்ளல் வணம்புகுவான் என்றுரைத்த மாற்றத்தால். (பூசை-பூனே) ஆவும் அழுத; அதன் கன்றழுத அன்றலர்ந்த பூவும் அழுத, புனல் புள்ளழுத கள்ஒழுகும் காவும் அழுத: களிறு அழுத: கால்வயப்போர் மாவும் அழுதன; அம்மன்னவனை மானவே: |கா-சோலை) 12. டிெ தகர்நீங்-100, 102,