பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனில் மக்கள் குரல் g ஆறறிவுக்குக் கீழ்ப்பட்ட உயிரினங்களும் வருந்தின் என்று கூறி இராமன் பிரிவால் அயோத்தி மக்கள் அடைந்த துன்ப மிகுதியைப் புலப்படுத்துகின்ருன் கவிஞன். இங்ஙனம் இராமனுக்கு நேரிட்ட இடுக்கணைக் குறித்து மக்கள் எழுப்பிய அவலக் குரல் காட்டப் பெறுகின்றது. இராமன், சீதை, இலக்குவன் ஆகிய மூவரும் வனத் திற்குப் பயணமாகும்போது ஊர் மக்களின் வருத்தத்தை யும் மிக அழகாகக் காட்டுகின்ருன் கவிஞன். அஞ்சன மேனிஇவ் வழகற்கு எய்திய வஞ்சனை கண்டபின் வகிர்ந்து நீங்கலா நெஞ்சினும் வலிதுஉயிர் கினைப்பது எனகடு நஞ்சினும் வலியநம் நலம்என் ருர்சிலர்' இராமனுக்குக் கொடிய வஞ்சனேயால் விளைந்த தீங்கி னைக் கண்டும், தன்னலத்தின் காரணமாகத் தம் நெஞ்சு வெடிக்காமலிருக்கின்றதே என்றும் உயிர் உடலை விட்டு இன்னும் பிரியாதிருக்கின்றதே என்றும் கூறுவர் சிலர். *இதுவரையில் இராமன் முடிபுனைந்து வருவான் என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருந்த நாம் அவன் கானேகு வதைக் காண்பதா? பெண் கொடிய வினையைச் செய்யும் படி ஏற்பட்ட நாட்டில் கண்கொண்டு பிறந்தது கழிபட்ட காரியம்’ என்று பேசுவர் சிலர். இன்னும், முழுவதே பிறந்துஉலகு உடைய மொய்ம்பினேன் உழுவைசேர் கானகத்து உறைவென் யான்என எழுவதே எழுதல்கண்டு இருப்ப தே! இருந்து அழுவதே அழகிது.இவ் அன்பென் ருர்சிலர்' மூவரும் மரவுரி உடுத்து வீதியில் செல்வதைக் காணும் ஒரு சிலர் இந்த அயோத்தியில் சுமித்திரை பெற்ற 18. தகர்-189 14. டிெ -191.