பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

is] கம்பனில் மக்கள் குரல் இலக்குவன் மட்டிலுத்தான இராமனுக்கு உறவு' என்று பேசுகின்றனர். மேலும், நிறைமகவு உடையவர் நெறிசெல் ஐம்பொறி குறைமக குறையினும் கொடுப்ப ராம்உயிர்; முறைமகன் வனம்புக மொழியைக் காக்கின்ற இறைமகன் திருமன்ம் இரும்புஎன் ருர்சிலர்" இவர்கள் கற்றில் மொழியைக் காத்தல்' :இறைமகன் 'திருமணம் என்ற சொற்ருெடர்கள் கேலிக் கூத்துக்கு இலக்காகி விட்டன. இன்றைய மக்களாட்சியில் : நிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது பலவாறு சின்-லா" பேசும் நமக்கு இவர்கள் பேச்சு புரியாமற் போகாது. அன்றியும், நகர மாந்தர் அனைவரும் இராமன் சென்ற தேரைத் தொடர்ந்து செல்கின்ற காட்சியைக் காண்கின் ருேம். கோளுட்சியாக இருப்பினும் குடிமக்களுக்கொத்த ஆட்சியாக இருந்ததால் குடிமக்களுக்குக் கொற்றவன் மீது அவ்வளவு ஈடுபாடு இருந்தது. இராமனே அழைத்து வருவதற்காக பரதன் காட்டிற்குச் சென்றபொழுதுகூட அயோத்தி மக்கள் அனைவரும் பரதனுடன் சென்றதி விருந்து, ஆட்சியில் மக்கள் எவ்வளவு பங்கு கொண்டிருந் தனர் என்பது அறியக் கிடக்கின்றது. இராமன் தான் அயோத்திக்குத் திரும்பி வருவதாகக் குறிப்பிட்டுச் சென்ற நாளில் திரும்பி வரவில்லை. உடனே பரதன் மின்னு தீயிடை வீழ்வதற்கு ஆயத்த மாகின்ருன். அயோத்தி மக்கள் அவலக் கடலில் ஆழ்கின்றனர். பரதன் நெருப்பில் குதிப்பதற்குத் தயாராக இருக்கின்ருன். திடீ ரென்று அநுமன் அங்குத் தோன்றி எரியை அவித்து விடு கின்ருன். பிறகு இராமன் கொடுத்த அடையாளமாகிய மோதிரத்தையும் காட்டுகின்ருன். அங்குத் திரண்டிருந்த மக்களும் இளையகோவும் அடைந்த நிலையைக் கவிஞன், 15; நகர்நீங்-198,