பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i? கம்பனில் மக்கள் குரல் சுண்ணமும் சாந்து நெய்யும் சுரிவளை முத்தும் பூவும் எண்ணெயும் கவின மாவில் ஆழியும் எண்ணில் யான வண்ணவார் மதமும் நீரும் மான்மதம் தழுவும் மாதர் கண்ணவாம் புனலும் ஒடிக் கடலையும் கடந்த அன்றே" இக் கவிதைகளால் இராமன் மக்கள் மனத்தை எவ்வாறு கவர்ந்துள்ளான் என்பது அறியக் கிடக்கின்றது. இங்ங் னமே முடிபுனைந்த பொழுதும் மக்கள் அடைந்த மகிழ்ச்சி யைக் கவிஞன் காட்டுகின்ருன். 3 அக்காலத்தில் மிதிலையிலும் கோட்ைசியே நிலவி யிருந்தது. என்ருலும், அங்கும் அரசாட்சியில் மக்கள் மிகவும் அக்கறை கொண்டிருந்தனர். சனகன் சீதைக்குக் கன்னியா கல்கமாக வைத் திருந்த வில்லை யாரும் வளைத்து நானேற்ற முடியாததால் சீதையின் திருமணம் நடை பெருமலே இருந்தது. அந்த வில்லை. இராமன் வளைத்து நானேற்றும் சந்தர்ப்பம் வருகின்றது; ஈசனது வில்லும் இராமனுக்கு முன்னர் கொண்டு வரப்பெறுகின்றது. பேராற்றலையுடைய அறுபதியிைரம் பேர் அதனைச் சுமந்துகொண்டு வருகின்றனர். இதனைக் கண்ட மக்கள் பவர் பலவாறு பேசிக் கொள்ளுகின்றனர். சீதையின் திருமணத்தில்-தம் நாட்டு வேந்தன் மகளது திருமணத்தில்-அதிக அக்கறை கொண்டிருந்தவர் களுக்கு சனகன் வில்லைப் பணயமாக வைத்தது பிடிக்க வில்லை. வில்லே சீதையின் திருமணத்திற்குப் பெருந் தடையாக இருக்கின்றது என்று எண்ணுகின்றனர். ஒரிடத் தில் இந்த வில்லைக் கொண்டு வருக என்று எதற்காகச் சொன்னன் இவ்வரசன்?’ என்பர் சிலர்; மற்றும் சிலர் 18. புத்த:மீட்சி- :37, 338, 339, 340,