பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனில் மக்கள குரல் } : என்ற ஒர் அரக்கன் வாலியை வந்தெதிர்த்தான். வாவி அவனைத் துரத்திக்கொண்டு சென்று இறுதியில் பாதாள லோக வழியாகிய பெரிய பிலத்தினுள்ளே சென்று நீண்ட நாள் திரும்பவில்லை. சுக்கிரீவன் மிகவும் துன்பமடைந்து தானும் அப்பிலத்தினுள் சென்று அம்மாயாவியுடன் போரிட முற்பட்டான். ஆனல், வானர குலத்திலுள்ள பெரியோர்களில் சிலர் அவனே மறித்து, நீயும் போய் விட்டால் எங்கட்குக் கதி யார்? இனி நீயாவது இருந்து அரசாட்சி செய்’ என்று வெகுவாய்ச் சொல்லி நிறுத்தி ஞர்கள்.என்ற வரலாற்றை நாம் அறிகின்ருேம். இதல்ை சுக்கிரீவன் மக்கள் குரலுக்குக் மதிப்புக் கொடுத்து மன்ன கை இருக்க ஒருப்பட்டான் என்பது அறியக் கிடக்கின் றது. வாலி இறந்ததனுல் தாரை, அங்கதன் ஆகியோ ரைத் தவிர வேறு ஒருவரும் துக்கப்பட்டதாகக் கவிஞன் காட்டவில்லை. கோசல நாட்டிலும், மிதிலை நாட்டிலும் அரச குடும்ப நிகழ்ச்சிகளிலெல்லாம் மக்கள் குரலைக் காட்டிய கவிஞன், கிட்கிந்தை நாட்டு அரசன் இறந்த தற்குக் கூட மக்கள் உட்கிடக்கையைக் காட்டாததால், வாலியாட்சி மக்கள் கருத்திற் கிணங்க நடைபெறவில்லை என்று ஊகிக்க வேண்டியுள்ளது. சுக்கிரீவனுக்கு முடி புனேவித்து சில அரச நீதிகளைப் புகட்டுகின்ருன் இராமன். அவற்றின் சாரம் மக்கள் குர லுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதே; மக்கள் கொதித்தெழுந்தால் பெரிய வல்லரசும் கவிழ்ந்துவிடும் என்பதைக் கவிஞன் இராமன் மூலமாகப் பேசுகின்ருன் என்று கொள்வதே ஏற்புடைத்து, வாய்மைசால் அறிவின் வாய்த்த மந்திர மாந்த ரோடும் தீமைதீர் ஒழுக்கின் வந்த திறத்தொழின் மறவ ரோடும் தூய்மைசால புணர்ச்சி பேணித் துகளறு தொழிலையாகிச் சேய்மையோ டணிமை யின்றித் தேவரில் தெரிய நிற்றி. 22, கிட்கிந்தை அரசியல்-7