பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனில் மக்கள் குரல் 17 இறத்தலும் பிறத்தல் தானும் என்பன இரண்டும் யாண்டும் திறத்துளி நோக்கிற் செய்த வினைதரத் தெரிந்த அன்றே புறத்தினி யுரைப்ப தென்னே பூவின்மேற் புனிதற் கேனும் அறத்தினது இறுதி வாழ்காட் கிறுதிய துறுதி என்ப." நான்முகனும் அறத்தினின்று வழுவினல் அழிவது திண் ணம்: அறம்பிறழாமையே வாழ்நாளுக்கு உறுதிபயக்கும். வாலியை விட சுக்கிரீவன் வவியற்றவன் என்பதை இராமன் நன்கு அறிவான். ஆட்சி மாற்றத்தால் கிட் கிந்தை நாட்டில் யாதேனும் குழப்பம் விளையக்கூடும் என்பதை எதிர்பார்க்கவும் செய்கின்ருன். அதுமனுக்கு அறவுரை பகர்ந்து அனுப்பும்பொழுது இதனை அறிகின் ருேம். கிரம்பின்ை ஒருவன் காத்த கிரையரசு இறுதி கின்ற வரம்பிலாது அதனை மற்ருேர் தலைமகன் வலிதிற் கொண்டால் அரும்புவ நலனும் தீங்கும் ஆகலின் ஐய! கின்போற் பெரும்பொறை அறிவி னேரால் கிலேயினைப் பெறு வதம்மா." அறிவு, ஆண்மை, பெருமை என்ற மூவகைத் திறனும் நிரம்பிய ஒருவனது ஆட்சியை அம் மூன்றிலும் ஒரளவு குறைவுள்ள மற்ருெருவன் வலிதிற்கைகொண்டால், அத்திறன்கள் குறைவு காரணமாகவோ மக்களிடமிருந்து குழப்பம் விளையக்கூடும் என்று இராமன் எதிர் பார்த்தனன் என்ருல், அரசனும் மக்களும் ஆட்சியைப் பற்றி எவ்வளவு தூரம் சிந்தித் திருந்தனர் என்று கருத வேண்டியுள்ளது. எந்தையே இராகவ சரணம்’ என்ற சொல்லுடன் வீடணன் இராமனிடம் அடைக்கலம் புகுகின்ருன். இராமன் அவனைச் சேர்த்துக்கொள்வதா? அன்றி விட்டு 25. அரசியல்-14 26. :ു. -28 க.-2