பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i8 கம்பனில் மக்கள் குர்ல் விடுவதா? என்று தம் நண்பர்களுடன் கலந்தாய்கின்றன். சுக்கிரீவன், சாம்பவான், நீலன் ஆகிய தலைவர்களும் மற்று முள்ளோரும் வீடணனை ஏற்றுக்கொள்ளலாகாது என்று ஒரு முகமாகக் கூறுகின்றனர். இறுதியில் அநுமன், வீடணன் தீயவன் அல்லன் என்று காரணங்களுடன் கூறி, வீடணன் வரவு நல்வரவாகட்டும் என்று எடுத்துரைக்கின்ருன். இராமன் ஆவண் இருந்தோரை நோக்கிக் கூறுகின்ருன்: ஊருதி வினய வார்த்தை செவிமடுத்து அமிழ்தின் மாந்திப் பேரறி வாள கன்று கன்றெனப் பிறரை நோக்கிச் "சீனிது மேலிம் மாற்றம் தெளிவுறத் நேர்மின் ஒன்கு ஆரியன் உரைப்ப தானுன்; அனைவரும் அதனைக் கேட்டார். ' அநுமன் உரைத்தது சரியேயென்று தக்க காரணங் களுடன் எடுத்துவிளக்கி வீடணனஏற்றுக்கோடலே தக்கது என்று முடிவும் கூறுகின்ருன்.வீடணனைக்கொணருமாறு சுக்கி ரீவனையே அனுப்புகின்ருன் இராமன். இந்த நிகழ்ச்சியால் இராமன் மக்கள் குரலுக்கு மதிப்புக் கொடுத்தமையையும், கிட்கித்தை அரசனிடம் தான் உதவித் வேண்டித் தோழமை பூண்டிருத்த பொழுதும் அப்பண்பைப் பலர் அறியக் காட்டினமையையும் அறிகின்ருேம். 5 இறுதியாக, இலங்கை அரசில் மக்கள் குரலுக்கு என்ன மதிப்பு இருந்தது என்பதைக் காண்போம்: ஆரணிய காண்டத்தில்தான் முதன்முதலாக இராவணன் *功「cm வீற்றிருக்கும் சிறப்பு காட்டப்பெறுகின்றது. இந்நிலையில் "மூக்கும் காதும் வெம்முரண் முலைக் கண்களும் இழந்த சூர்ப்பனகை இலங்கை நகர்க்கு வருகின்ருள். அவள் வந்த நிலையைக் கவிஞன் இவ்வாறு கூறுகின்ருன்: 37. யுத்த வீடணன் அடைக்-106