பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனில் மக்கள் குரல் io9 தங்கையும் அவ்வழித் தலையில் தாங்கிய செங்கையள்; சோரியின் தாரை சேந்துஇழி கொங்கையள், மூக்கிலள்; குழையில் காதிலாள்; மங்குலின் ஒலிபடத் திறந்த வாயினள்: (மங்குல்.மேகம்) இவள் இலங்கை நகரின் வடதிசை வாயிலின் வழியாக இலங்கை நகர்க்குள் நுழைகின்ருள்;தன்னுடைய குறையை எடுத்து உரக்கக் கூறிக்கொண்டு வருகின்ருள். அவளது அவல நிலையைக் கண்ட அரக்கப் பெருமக்கள் மிகவும் துயருறுகின்றனர். முக்கியமாக மகளிர் சோகத்துடன் அழுகின்றனர். அவளைக் கண்ணுற்ற ஆண்மக்கள் ஒன்றும் சொல்லத் தெரியாதவராய்த் திகைத்து நிற்கின்றனர்; கோபக்கனல் தெறிக்க உதட்டைக் கடித்துக்கொண்டு வாளா நிற்கின்றனர். இத்தகைய அவமானம் நேர்ந்தது தேவேந்திரனுலோ? அல்லது உலகைப்படைத்த மலரவன் பாற்பட்டதோ? அல்லது ஆழியான் காரணமாக இருப் பானே? அன்றி, சந்திரனை முடியில் தரித்த சிவ்னிடத்தில் பொருந்துவதோ? என்று பலவாறு அயிர்த்து மனங்கொதிக் கின்றனர் சிலர். இந்த அண்டத்தில் இராவணனுக்குப் பகைரொருவருமில்லையாதலின், வேறு அண்டங்களி லுள்ளவர் யாராவது இத்தீங்கினே இழைத்திருத்தல் கூடும் என்று சிலர் உரைக்கின்றனர். இன்னும் சிலர் சூர்ப் பணகைக்கு ஏற்பட்ட செய்கையில் ஏதோ சூழ்ச்சி இருக்க வேண்டும் என்று ஐயுறுகின்றனர். என்னையே இராவணன் தங்கை என்றபின் அன்னையே என்றடி வணங்கல் அன்றியே உன்னவே யொண்னுமோ ஒருவ ரால்இவள் தன்னையே அரித்தனள் தான்என் ருர்சிலர்." 28. ஆரணியன்மாரிசன்வதை-24 29. டிெ - 80