பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Żë கம்பனில் மக்கள் குரல் அவளாகவே அரிந்து கொண்டிருக்கவேண்டும் என்பது சிலரது ஐயம். இக்கருத்தையே இன்னெரு விதமாக வீடணன் கொண்டிருத்தலைப் பின்னல் காண்கின்ருேம். கொல்லாத மைத்துனனைக் கொன்ருய்என்(று) அதுகுறித்துக் கொடுமை சூழ்ந்து பல்லாலே இதழ்.அதுக்கும் கொடும்பாவி நெடும்பாரில் பழிதீர்ந் தாளோ? என்று இதனைக் கம்பன் காட்டுகின்ருன். வேறு சிலர். ஒருகால் இவள் கற்புநிலை கடந்துவிட்டாள் என்று கருதி கரன் இவளே அழகற்றவளாகச் செய்திருக்கக் கூடுமோ என்று அயிர்க்கின்றனர். இன்னும் சிலர் முனிவர்களுடைய வெகுளியின் முடிவாக இருக்கக் கூடுமோ என்று கூறு கின்றனர். இந்த இடத்தில் பொதுமக்கள் பலவாறு தத்தமக்குத் தோன்றியவாறு பேசுவதைக் காண்கின்ருேம். இந்திரசித்து அதுமனே மலரவன் கணையால் பிணித்துத் தெருவழியே இழுத்துச் செல்லும்பொழுது அரக்கன் பலர் திரளுகின்றனர். அப்பொழுது அநுமனே என்ன செய்யவேண்டுமெனப் பலர் பல்வேறு கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். இச்சடை படைகளான் கலியும் மீண்டதோ வச்சிர மூடன்மறி கடலின் வாய்மடுத்து உச்சியின் அழுத்துமின் உருத்த கின்றெனிற் கிச்சிடை விடுமெனக் கிளக்கின் ருர்பலர். எந்தையை எம்பியை எம்மு னோர்களைத் தந்தன போகெனத் தடுக்கின் ருர்பலர் அந்தரத் தமரர்தம் ஆணையால் இவன் வந்ததென் றுயிர்கொள மறுகினர் பலர்." என்ற பாடல்களில் இவற்றைக் காணலாம். ஆனல், 89. இராவணன் வதை 225 81. பினிவிட்டு . 3, 4