பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பனில் மக்கள் குரள் 2i. அரசனைப்பற்றியோ, ஆட்சியைப்பற்றியோ, அல்லது அரசன் செயலைப்பற்றியோ யாதொன்றும் காணப்பெற வில்லை, சீதையைச் சிறையிட்டதால்தான் இவ்விளைவுகள் யாவும் நேரிட்டன என்று ஒருவர்கூடப் பேசவில்லை. இராவணன் சீதையைச் சிறையிட்டது பலருக்கு உடன் பாடாக இருந்திருக்கலாம்; அல்லது, அரசனது ஆணைக்குப் பயந்து வாய்பேசாது அடங்கியும் இருக்கலாம். அநுமனல் எரியுண்ட இலங்கையைத் தெய்வ தச்சன் புதுப்பித்த பிறகு இராவணன் மந்திராலோசனை சபை யைக் கூட்டுகின்ருன். இதில் தனக்கு வேண்டியவர்களை மட்டிலும் வருவித்து, பிறரையெல்லாம் புறத்தே போக்கி விடுகின்ருன், அவையின்கண் யாரும் வாராதிருக்கக் காவ லாளரை நிறுவுகின்ருன். குரங்கினல் அவமானம் அடைந் ததற்கு மிகவும் மனவருந்திக் கூறுகின்றன். வீடணனைத் தவிர, ஒருவராவது இராவணனது தவற்றை எடுத்துரைக்க வில்லை. ஆனல், கும்பகருணன் மட்டிலும் பிறன்மனை நோக்கிய அன்றே அரக்கர் புகழ் அழிந்துவிட்டது என்றும், கெளரவத் தின் காரணமாகச் சீதையைத் திரும்பக் கொண்டு விடுதல் தம்முடைய எளிமையைப் புலப்படுத்தி விடும் என்றும், இவ்வாறு செய்வதைவிட போரில் இறந்து படுதலே தக்கது என்றும் எடுத்துரைக்கின்ருன். இவற்றை யெல்லாம் நோக்குமிடத்து, இலங்கையில் உள்ள மந்திர சபை. அரசனுக்கிணங்க இயங்கியது என்று அறிகின்ருேம். இன்னும் இராவணன் ஆணைக்கும் ஆற்றலுக்கும் பயந்தே, ஒரு கால் மக்கள் குரல் எழுப்புவதற்கே அஞ்சி வாழ்ந் தனரோ என்றுகூட ஊகிக்க வேண்டியுள்ளது. 6 எனவே, கம்பன் காவியத்தின் பல்வேறு சந்தர்ப்பங் களில் மக்கள் குரலைக் கண்டோம். கோனாட்சியாக இருப்பினும் குடியாட்சிக் கருத்துகளுக்குக் கம்பன்