பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翌2 கம்பனில் மக்கள் குரல் முதலிடங் கொடுத்துள்ளான் என்பது ஆங்காங்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் காட்டப்பெறுகின்றது. மக்கள் குர்லுக்கு மன்னர்கள் மதிப்புக் கொடுத்தமையால், கோனாட்சி மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது. முறைசெய்து மக்களை மன்னர்கள் காப்பாற்றியதால் மக்கள் அவர்களை இறையென்றே எண்ணி வந்தனர். ஆளுவது முக்கிய மன்று; ஆட்சி முறையே முக்கியம் என்பதை அக்கால மக்கள் நன்கு அறிந்திருந்தனர். கம்பன் காவியத்தில் இவற்றையெல்லாம் நன்குக் காண்கின்ருேம்.