பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. காவியத் தம்பி; "உடன் பிறப்பு இல்லா உடம்பு பாழ்' என்பது ஆன்ருேர் வாக்கு. இராமனுக்குத் தம்பியர் பலர்; கூடப் பிறந்தோர் மூவர் ; பிறப்புத் தளையில்லாது போயினும் அதை விட வலிமையான அன்புத் தளையால் பிணிக்கப் பட்டுக் கூடச் சேர்ந்தோர் மூவர். தனக்கு ஆறு தம்பியர் இருக்கின்றனர் என்பதை இராமனே கூறுகின்ருன். இராமனைச் சரண் அடைந்த வீடணன் தாழ் கடல் இலங் கைச் செல்வத்தைப் பெறுவதற்கு அடையாளமாக இலக்கு வன் அவனுக்கு முடி சூட்டுவதற்கு முன்பு விடணன் இராமனை வணங்கி, "என்றும் வீயா அளவறு பெருமைச் செல்வம் அளித்தனை ஆயின் ஐய! களவியல் அரக்கன் பின்னே தோன்றிய கடன்மை தீர இளையவற் கவித்த மோலி என்னையும் கவித்தி' அெமுதசுரபி (தீபாவளி மலர் 1954) யில் வெளி வந்தது. 1. வீடணன் ஆடைக்-145.