பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியத் தம்பி 25 அகன் அமர் காதல் ஐய! ன்ேளுெடும் எழுவர் ஆனேம்! புகல் அரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் உங்தை' |குன்று சூழ்வான்.மேருமலையைச் சுற்றி வரும் சூரியன்; அவன் மகன்-சுக்கிரீவன்; எம்முழைஎம்மிடத்து; அகம்-உள்ளம்; காதல்-அன்பு: புகல் அரும்-புகுதற்கு அரிய) என்று காட்டுகின்ருன். இராமன் வீடணனிடம் கூறும் போது எந்தை என்னது உந்தை” என்றதால், தான் தம்பி யாக அங்கீகரித்ததை வற்புறுத்துவதற்காகவே என்று: கொள்ளவேண்டும். இன்று இவ்வுலகில் நல்ல சகோதரர்கள் வாய்த்திருக் கும் குடும்பம் வறுமை நிலையிலிருந்தாலும் செல்வத்தில் திளைத் திருந்தாலும் சிறப்புடன் விளங்குவதைக் காணத் தான் செய்கின்ருேம். அத்தகைய குடும்பத்தில் உள்ள வர்கள் எவ்விதப் பகைக்கும் அஞ்ச வேண்டியதில்லே என்பது அநுபவத்தில் நாம் காணும் உண்மை. கூர்ந்து கவனித்தால் இவ்வுலகில் பல சான்றுகளைக் காணலாம். அந்தக் காலத்தில் இராமனுக்கு நல்ல தம்பியர் கூடப் பிறந்தாலும், சேர்ந்த தம்பியரும் சான்ருேராக அமைந்து விட்டதாலும் இராமன் தன் வாழ்க்கையில் கண்ட பல பகைகளையும் எளிதாகச் சமாளித்துக் கொள்கின்றன். "தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத் தீவினை என்ன நீத்துச் சிந்தனை முகத்தில் தேக்கிச்' 2. டிெ - 246 3. குகப்படிலம், 5ே